லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ சாம்பலான வீடுகள்

உலக சினிமாவின் தலை நகரமாக பார்க்கப் படும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலத்தில் உள்ள பாலி சேட்ஸ் எனும் பகுதியில் கடந்த ஏழாம் தேதி காட்டுத்தீ பரவ ஆரம்பித்தது கடந்த ஐந்து ஆறு நாட்களாக காட்டுத்தீ லாஸ் ஏஞ்சலஸ் நகரை விழுங்கி வருகிறது இதுவரை அமெரிக்க கண்ட தீ விபத்தில் இதுதான் மிகப்பெரிய தீ விபத்தாகும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் உள்ளதாக கூறுகின்றனர்.

இதுவரை 16 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர் மேலும் இறப்பு எண்ணிக்கை பல மடங்கு கூடுமோ என அரசாங்கமும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.

உயிர் இழப்புக்கு காரணம், காட்டுத் தீயின் நடுவில் சிக்கிக் கொண்டதாலும் மற்றும் கடுமையான புகையின் காரணமாக மூச்சுத் திணறியும் பலர் உயிர் இறந்துள்ளனர்

இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்களும் ராணுவ வீரர்களும் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீரை பீச்சு அடித்து வருகின்றனர் காட்டுத் தீ தற்போது பிரவுன் பகுதியில் பரவி பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் ராணுவ வீரர்களும் போராடி வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயால் சுமார் இரண்டரை லட்சம் மக்களை அரசாங்கம் வெளியேற்றி உள்ளது. மக்கள் தங்களால் முடிந்த பொருட்களை மட்டுமே வீட்டை விட்டு எடுத்து சென்றனர் பலர் கண்ணீரோடு தான் வாழ்ந்த வீட்டை விட்டு செல்வதை பார்க்கையில் மனதை வருத்துவதாக இருந்தது.

இந்த சோகங்களுக்கு மத்தியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாங்கள் வசித்த வீடுகளை விட்டு வெளி யேறிய மக்களின் வீடுகளில் தற்போது கொள்ளையர்கள் புகுந்து திருடி செல்வதும் திருடி விட்டு வீட்டை தீவைத்து கொளுத்துவதும் போன்ற மனிதாபிமானம் அற்ற செயல்களும் அங்கே அரங்கேறி வருகிறது இதுவரை 20 பேருக்கும் மேற்பட்டோர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீயில் கருகிய ஹாலிவுட்

ஹாலிவுட் மலைப் பகுதியில் பரவிய காட்டு தீயை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை, ஹாலிவுட் மலை பகுதியில் உள்ள வீடுகள் வணிக கட்டிடங்கள் பாடசாலைகள் என 6000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நெருப்பில் எரிந்து சாம்பல் ஆகி உள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள் தாங்கள் ஆசை ஆசையாக வாழ்ந்து வந்த சொகுசுப் பங்களாக்கள் எல்லாம் இந்த காட்டுத் தீக்கு இறையாகி சாம்பல் ஆகிவிட்டது.

தீயை அணைக்க போராடும் அரசாங்கம்

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதா அங்கே பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர் தீ விபத்து போன்ற அவசர காலங்களில் மற்ற நகரங்களில் இருந்து தண்ணீரை உடனே கொண்டுவர முடியாத நிலையில் தான் லாஸ் ஏஞ்சலஸ் உள்ளது அதற்கான போதிய உபகரணங்களும் அவர்களிடம் இல்லை.

தீயை அணைக்க அதிகாரிகள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை பயன்படுத்தி வருகின்றனர் அது மட்டும் அல்லாமல், பல நட்பு நாடுகளின் உதவியுடன் கலிபோர்னியா மாகாண அரசு காட்டுத் தீயின் பரவலை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் காட்டுத் தீயின் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால் தீயின் பரவல் வேகமாக இருப்பதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

கலிபோர்னியா திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத்துறையினர் தலைமையிலான தன்னார்வ தொண்டர்கள் தீயணைப்பு படையுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

இருந்தாலும் அவசரகால பணி என்பதால் களத்தில் இருக்கும் தீனைப்பு படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை இதனை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் சிறை கைதிகளை இந்த தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த பணியில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பெண்களும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 900 திற்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு சிறப்பு பயிற்சி தற்போது அளித்து இந்த தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

தீ விபத்து எப்படி பரவியது.?

கலிபோர்னியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தான் இந்த தீ வேகமாக பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த காட்டு தீக்கு முக்கியமான காரணமாக கூறப் படுவது மின்கசிவு அல்லது மின் இணைப்பின் கோளாறு போன்ற காரணங்களால் காட்டுத்தீ பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

அத்தோடு வறட்சியான நிலப்பரப்பாக இருப்பதால் காற்றின் வேகம் அதிகரித்து காட்டுத் தீ வேகமாக பரவி வந்துள்ளது சில பகுதிகளில் காட்டுத் தீ மணிக்கு 50 மையில் வேகத்தில் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புகள்

கலிபோர்னியாவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டது ஏராளமான மக்களின் வீடுகளும் தீக்கு இரையாகி விட்டது வனப் பகுதியில் உள்ள மரங்கள் கால் நடைகள் என அனைத்தும் அழிந்து விட்டன பல மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மீண்டும் எப்படி அமைத்துக் கொள்வது என்று திண்டாடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது வனப் பகுதியில் மரங்கள் எரிந்து அழிவதால் காற்றில் உள்ள ஆட்சி ஆக்ஸிஸனின் அளவு குறைந்து கார்பன் டையாக்சைடு அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் வானிலையிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமும் பீதியை கிளப்புகிறது

இந்த காட்டுத் தீயால் சுமார் 150 பில்லியன் டாலர்கள் வரை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத பொருளாதார சேதத்தை இந்த காட்டுத் தீ ஏற்படுத்தி உள்ளது இதில் காப்பீடு எடுத்தவர்களின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகவும் காப்பீடு எடுக்காதவர்களின் மதிப்பு 100 மில்லியன் டாலராகவும் இருக்கும் என ஜே பி மார்க்கம் என்ற தனியார் நிறுவனம் கூறி வருகிறது இது அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சேதம் ஆகும்.

இந்த எதிர்பாராத காட்டுத் தீயினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை எந்தவித காப்பீடும் எடுக்காத மக்கள் எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்று புலம்பி வருகிறார்கள்.

இங்கே இன்சுரன்ஸ் எடுக்காதவர்கள் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய வீடுகளையும் வாகனங்களையும் இழந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான மதிப்பீட்டையும் வெளியிடவில்லை ஆனால் இழப்பு பல பில்லியன் டாலர்களை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Read Also ; பொடிகள் மற்றும் கூட்டு வகைகள் செய்வது எப்படி

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

தீ விபத்துக்கு பின்னர் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும் அவைகளை கணக்கிடவும் கலிபோர்னியா அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அது மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் பல தொண்டு நிறுவனங்களும் தன் ஆர்வலர்களும் அரசு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மறு சீரமைப்பு பணிகளை துரிதமாக செயல்பட முடுக்கி விடப்பட்டுள்ளது மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் அதிகமாக தேவைப் படுகிறது தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் இந்த தீ விபத்தின் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகுந்த அச்சத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இதனிடையே லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகங்கள் தங்கள் மாணவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவையும் பிறப்பித்துள்ளது அதேபோல மாணவர்கள் கலிபோர்னியாவை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் பல்கலைக்கழகங்களை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மாணவர்களும் அங்கிருந்து வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளின் சேதம்.

ஹாலிவுட் நடிகர் ஆண்டனி ஹப் இன்சின் வீடும் தீயில் எறிந்து நாசமாகிவிட்டதா பாலிசி தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது அதில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் சர் ஆண்டனி ஹப் இன்சின் வீடும் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது அப்போது அவர் கூறியதாவது நாங்கள் எங்களுடன் எடுத்துச் செல்வது அன்பு மட்டுமே என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் நட்சத்திரமான பாரிஸ் ஹில்டன் நடிகர்கள் கிரிஸ்டல் ஆஸ்கர் விருது பெற்ற பாடல் ஆசிரியர் டயான் வாரன் கேரி எல்வெஸ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் வீடுகளும் இந்த காட்டுத்தையால் இருந்து சாம்பலாகி விட்டது தங்களின் வீடுகளில் விலை மதிப்புமிக்க பல பொருட்கள் சாம்பல் ஆகிவிட்டது என கண்ணீர் விடுகின்றனர்.

காட்டுத்தீயில் எரிந்த 11 ஆயிரம் கோடி சொகுசு பங்களா

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சுமார் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

லுமினார் டெக்னாலஜியின் தலைமை செயல் அதிகாரி ஆஸ்டின் ரசலுக்கு சொந்தமான 11 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா தான் தீக்கிரையாகியுள்ளது 18 படுக்கையறைகள் கொண்ட இந்த மாளிகை வீடு மானத்திற்கு நாலு கோடி ரூபாய் க்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது.

ரசல் உருவாக்கிய இந்த சொகுசு பங்களா மிகப் பெரிய சமையல் அறை 20 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் மதுபான அறை பிரபல நட்சத்திரங்களை பார்ப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வீட்டின் மேற் கூரை ஆகியவை இந்த வீட்டின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

தீயில் இருந்து தப்பித்துக் கொள்ள பதுங்கு குழிகள் போன்ற சில அம்சங்கள் இருந்தாலும் இந்த வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளது

Read Also ; இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் கில்

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள என்னென்னா?

எதிர் காலத்தில் தீ விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு அனுபவம் அடிப்படையிலான கல்வியை வழங்க வேண்டும்.

கலிபோர்னியாவின் ஏற்பட்ட அனுபவங்கள் உலக நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கின்றது, ஒவ்வொரு நாடும் தங்கள் வனப் பகுதிகளை பாதுகாக்க சரியான வழி முறைமைகளை தேடி உருவாக்க வேண்டும்.

தீ விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு மனிதரும் தங்களுக்களுக்கு ஏற்பட போகும் சோதனைகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்த காட்டுத்தையால் பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் மக்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரோடு தெரிவித்துள்ளார் அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்..

தீ விபத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *