உலகின் தலை சிறந்த 9 ஆல்ரவுண்டர்கள்

கிரிக்கெட் உலகில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய ஒரு சில வீரர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

ஒரு ஆல் ரவுண்டர் என்பவர் தன் அணிக்காக பேட்டிங் பந்து வீச்சில் சிறந்து விளங்கி அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

அவ்வாறு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கி கிரிக்கெட் உலகில் சிறந்த 10 ஆல் ரவுண்டர்களை பற்றியும் அவர்களின் சாதனைகளையும் புள்ளி விவரமாக பார்ப்போம்.

ஆண்ட்ரூ பிளின்டாஃப்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டராக விளங்கியவர்
ஆண்ட்ரூ பிளின்டாஃப் இவர் 2000- ஆம் ஆண்டு கால கட்டங்களில் இங்கிலாந்தின் கிரிக்கெட் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 1986 /87 – ஆம் ஆண்டு மட்டுமே வென்றிருந்தது.

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ பிளின்டாஃப்-ன் தலைசிறந்த ஆட்டத்தால் பல வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரை வென்றது.

மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய வேகப் பந்து வீச்சாளரான பிளின்டாஃப் திகழ்ந்தார். அதே போல பந்து வீச்சில் 32.78 சரா சரியில் 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பேட்டிங்கை பொறுத்தவரை ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஐந்து சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் உட்பட பேட்டிங் சரா சரியும் 31.07 சராசரியுடன் சிறந்த பேட்ஸ் மேனாகவும் விளங்கினார்.

ஆண்ட்ரூ பிளின்டாஃப் எப்படி தனது அணிக்காக சிறப்பாக செயல்பட்டார் என்பதை 2006 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இவரின் செயல்பாடுகளை பார்த்தால் எப்பேர்ப்பட்ட ஆல் ரவுண்டர் என்பது தெரியவரும்

டோனி கிரேக்

டோனி கிரேக் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இங்லீஸ் வர்ணனையாளர் என்று இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தெரியும். ஒரு வர்ணனையாளராக அவரது புகழ் உச்சத்தில் இருப்பதால் அவர் கிரிக்கெட் விளையாடியதை ஒரு வேளை நாம் மறைத்து விட்டோம் போல.

ஆனால் டோனி க்ரேக் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர், அவர் 1970 களில் இங்கிலாந்து அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டோனி கிரேக் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டராக விளங்கினார், அவரது பேட்டிங் சராசரி 40.43 ஆகும், டோனி கிரேக் எட்டு சதங்கள் மற்றும் 20 அரை சதங்களை அடித்துள்ளார்.

பந்து வீச்சை பொறுத்த வரை மிக வேகம் மற்றும் வலது கை ஆஃப் ப்ரேக் ஆகிய இரண்டையும் கலந்து பந்து வீசும் திறன் கொண்டவராக விளங்கினார். பந்து வீச்சில் 32.20 சராசரியில் 141 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

1972 முதல் 1977 ஆம் ஆண்டு வரை மட்டுமே டெஸ்ட் கிரிகெட்டில் விளையாடினார், ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் இவர் விளையாடி இருந்தால் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆகி இருப்பார்

ஆனால் அவர் சாதித்ததை விட்டு விடக்கூடாது, ஏனெனில் எல்லா காலத்திலும் சிறந்த பத்து ஆல் ரவுண்டர்களின் பட்டியலில் எப்போதும் இவர் இடம் பெறுவார்.

Read Also ; இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் கில்

கபில் தேவ்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் சிறந்த வேகப்பத்து வீச்சாராகவும் 1980 காலகட்டத்தில் சிறந்து விளங்கியவர் கபில் தேவ் ஆவார்.

இன்று வரை இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவிற்கு பல சாதனைகளையும் செய்துள்ளார்.

16 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கினார். நிலையான பந்து வீச்சாளராகவும் இக்கட்டான நேரத்தில் அணியை சரிவில் இருந்து மீட்பதற்கு சிறந்த பேட்ஸ் மேனாகவும் கபில் தேவ் விளங்கினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 29.64 சரா சரியில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாத், ரிச்சர்ட் ஹாட்லீயின் உலக சாதனையை தனது இறுதி டெஸ்டில் முறியடித்து, 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் கபில் தேவ்.

பேட்ஸ் மேனாக கபில் தேவ் எட்டு சதங்கள் மற்றும் 27 அரை சதங்களையும் அடித்துள்ளார், இவரின் பேட்டிங் சராசரி 31.05.ஆகும்.

ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 1983 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக இந்திய அணி ஒற்றை இலக்க ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் போது கபில் தேவ் களத்தில் இறங்கி 175 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்ட முழக்காமல் இருந்தது இன்று வரை அவரது வாழ் நாளில் சிறந்த ஆட்டமாக நிலைத்து நிற்கிறது.

தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்று மேற்கு இந்திய கிரிக்கெட் அணியினர் பலமான அணியாக வளம் வந்து கொண்டிருந்தனர். அப்போது 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அபாயகரமான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தார் கபில் தேவ்.

ஷான் பொல்லாக்

ஷான் பொல்லாக் 7- வது வரிசையில் இறங்கி பலரும் ஆச்சரியப்படும் வகையில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளார் எந்த ஒரு கால கட்டத்திலும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராக விளங்கிவர் தான் ஷான் பொல்லாக்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவர் தான் பொல்லாக்.

பொல்லாக் ஒரு பந்துவீச்சு ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல் படக்கூடியர், அவர் விளையாடிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அதே நேரத்தில் பேட்டிங்கிலும் அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடியவர்.

பந்து வீச்சு சராசரி 23.11 க்கு 421 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், பொல்லாக் ஒரு சிறந்த சிக்கனமான பந்துவீச்சாளர் ஆவார் இவரின் பந்து வீச்சில் ரன்கள் அடிப்பது மிகவும் கடினம்.

பேட்டிங்கை பொருத்தவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார் பேட்டிங் சராசரி 32.31 ஆகும்.

இவரும் உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் எப்போதும் தவறாமல் இடம் பிடிப்பவர் ஆவார்..

இயான் போத்தம்

1980களில் இங்கிலாந்து அணியின் சிங்கம் ஒன்று சிறப்பாக செயல்பட்ட மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் தான் இயான் போத்தம்.

1981 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கில் வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், அந்த ஆஷஸ் தொடரின் ஹீரோவாக பார்க்கப்பட்டார், அந்த ஆஷஸ் தொடர் “போத்தம் ஆஷஸ்” என்று அழைக்கப்படும் அளவிற்க்கு சிறப்பாக செயல்பட்டார்.

இயான் போத்தமின் பேட்டிங் சராசரி 33.54  ஆகும் அவர் 14 சதங்கள் மற்றும் 22 அரை சதங்களை அடித்துள்ளார்.

பந்து வீச்சை பொறுத்தவரை 28.40என்ற சராசரியில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாமல் இருந்தார் அவரது உடல் நிலை சரியாக இருந்திருந்தால் அவரது பந்துவீச்சு சராசரி 21-க்கு கீழாகவே இருந்திருக்கும்.

ரிச்சர்ட் ஹாட்லீ

நியூசிலாந்து அணியின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார்.

ரிச்சர்ட் ஹாட்லீ நியூசிலாந்து அணியின் பவுலிங் ஆல் ரவுண்டர் அவர் ஆரம்ப காலத்தில் வேகமாக ஓடி வந்து பந்தை வீசும் திறன் கொண்டவராக இருந்தவர் சிறிது காலத்திற்குப் பிறகு தனது ரன்னப்பை குறைத்துக் கொண்டு சிறப்பாக பந்து வீசுவதில் வல்லவராகவும் இருந்தார்.

அவர் 22.29 சராசரியில் 431 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையாளராக விளங்கினார். 9/52 என்ற சிறந்த பந்து வீச்சை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தார்.

அதேபோல பேட்டிங்கை பொருத்தவரை கீழ் வரிசையில் இறங்கி சிறப்பானதொரு பேட்டிங்கை செய்து வந்துள்ளார். இரண்டு சதங்களுடன் 15 அரை சதங்களும் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 27.16 குறிப்பிடத்தக்கதாகும்.

கெய்த் மில்லர்

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் கெய்த் மில்லர் ஆவர்.

கெய்த் மில்லர் மிக வேகமாக பந்து வீசக்கூடிய ஓபனிங் பவுலர் ஆவார். இவர் ரே லிண்ட்வாலுடன் உடன் கூட்டணி சேர்ந்து பல போட்டிகளில் சிறப்பாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இவர் எடுத்த 170 விக்கெட்டுகளுமே இவரின் திறமையை உலகிற்கு காட்டும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக இவர் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது இவரது பந்துவீச்ச சராசரி 22.97 ஆகும்.

இவர் ஒரு ஸ்டைலிஸான கிளாசிக் பேட்ஸ்மேன் ஆவார் 7 சதங்களுடன் 13 அரை சதங்களும் அடித்துள்ளார் இவரது பேட்டிங் சராசரி 36.97 , இவர் அடித்த மொத்த ரன்கள் 2958..

இவர் ஒரு பந்துச்வீச்சு ஆல் ரவுண்டரா அல்லது பேட்டி ஆல் ரவுண்டரா என்று கணிப்பது இன்றுவரை கடினம் ஏனென்றால் அந்த அளவிற்கு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டவர் தான் கெய்த் மில்லர்.

Read Also ; பும்ராவின் பத்து வீச்சு யுக்தி எப்படி சாத்தியம் ஆகிறது

இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராகவும், ஆல் ரவுண்டராகவும், திறமையான கேப்டனாகவும் செயல்பட்டவர் தான் இம்ரான் கான்.

இவர் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகவும் பேட்ஸ் மேனாக செயல்பட்டுள்ளார் பந்துவீச்சில் 22.81 சரா சரியில் 362 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுவதால் பந்துவீச்சை நிறுத்திவிட்டு அணியில் ஒரு பேட்ஸ்மேனாகவே தொடர்ந்து வந்தார் ஓய்வு பெறும் தருவாயில் கூட பேட்ஸ் மேன் ஆகவே அணியில் நீடித்தார்.

இம்ரான் கான் தான் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் உட்பட சராசரியாக 37.69 உடன் சிறப்பாக செயல்பட்டார், 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற ‘ஆல்-ரவுண்டர்கள் டிரிபிள்’ என்ற இலக்கை எட்டிய எட்டு வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

1992 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் இவர்தான் தனது 39 ஆம் வயதில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்..

ஜால் காலீஸ்

சந்தேகத்துக்கு இடமின்றி நவீன கால கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர் ஜாக் காலீஸ் ஆவார்.

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களை விட இவரின் சராசரி அதிகபட்சமாகும்.

ஒரு பேட்ஸ் மேனாக, காலிஸின் சராசரி 57.02, இதில் 41 சதங்கள் மற்றும் 55 அரை சதங்கள் அடங்கும்.

பெரும்பாலான ஆல் ரவுண்டர்களைப் போலில்லாமல், காலிஸ் ஒரு தொழில் நுட்பம் வாய்ந்த திறமையான பேட்ஸ்மேன் ஆவார். பெரும்பாலான ஆல்-ரவுண்டர்கள் தங்கள் ரன் எடுப்பதற்க்காக அடித்து ஆட முயற்ச்சிப்பார்கள். ஆனால் காலிஸ் மிகவும் கிளாசிக்கலான அணுகு முறையில் கட்டுப்பாடாகவே விளையாடுவார்.

வேகப் பந்து வீச்சாளரான காலிஸ் 32.51 சரா சரியில் 274 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஜாக் காலிஸ் அவர்கள் நவீன கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஒரு புத்தகம் ஆகும் இவரைப்போல ஆல் ரவுண்டர்கள் இனி உருவாகுவது மிகப்பெரிய கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *