உலகில் பல விளையாட்டு துறைகளில் சிறப்பாக செயல் படும் வீரர்கள் பலர் மிகப் பெரிய அளவில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.
சில வீரர்க்ள் பல தொழில்களில் முதலீடு செய்தும் பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவர்களாகவும் செயல்பட்டு பலவாறு வருமானத்தை ஈட்டி வருகிறார்கள் அப்படி கிரிக்கெட் வீரர்களில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கக் கூடிய 8 நபர்களை இங்கே பார்ப்போம்.
சச்சின் டெண்டுல்கர் ( Sachin Tendulkar )
இந்தியாவில் கிரிக்கெட் என்ற ஒரு மதம் இருந்தால் அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கராகத்தான் இருப்பார் என்று பல வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர் தான் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவின் மும்பையில் பிறந்தவர். இளம் தன் வயதிலேயே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார் பின்னர் மும்பை ரஞ்சி அணியில் இடம் பிடித்து தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார் அதன் காரணமாக 1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 16 வது வயதில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் ஆனார்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் யாராலும் முறையடிக்கப்பட முடியாத அளவிற்கு பல சாதனைகளை செய்துள்ளார்.
சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான், டெஸ்ட் போட்டியில் 15921 ரன்களும் ஒரு நாள் போட்டியில் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக இடம்பெற்று இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பையின் பந்தரா பகுதியில் நூறு கோடி மதிப்புள்ளான ஆடம்பர பங்களாவில் வசித்து வருகிறார். லண்டனில் சொந்த வீடும், மற்றும் பல விலை உயர்ந்த சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.
அவரது வருமானம் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் பல பெரிய நிறுவனங்களில் முதலீடுகளும் செய்துள்ளார். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானங்களை இன்று வரை ஈட்டி வருகிறார் தற்போது சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 170 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
மகேந்திர சிங் டோனி ( Mahendra Singh Dhoni )
மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம் ஆவார். இவர் திறமையான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது.
மகேந்திர சிங் டோனி 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார. பள்ளி நாட்களில் பல விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்தார். குறிப்பாக கால்பந்து மற்றும் பேட்மிட்டன் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வந்த பிறகு தான் கிரிக்கெட்டில் முழு கவனத்தை செலுத்தினார்.
2004 ஆம் ஆண்டில் வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் மகேந்திர சிங் டோனி.
இவரின் தனித்துவமான விக்கெட் கீப்பிங் மற்றும் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி சிறப்பாக பயணிக்க தொடங்கியது இவரது தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி t20 உலக கோப்பையையும், அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையும் வென்றது.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணிக்கு பலமுறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வே அறிவித்தார்.
மகேந்திரன் சிங் டோனி மிக பெரிய பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார். கிரிக்கெட்டில் சம்பாதித்தது மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகள் மூலமும் பெரும் பொருளாதாரத்தை ஈட்டி வருகிறார் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Read Also ; உலகின் சிறந்த 10 பெண் தொழில் அதிபர்கள் யார்?
விராட் கோலி ( Virat Kohli )
விராட் கோலி 1988 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தவர் இவர் சிறு வயதிலிருந்து கிரிக்கெட்டின் மீது ஆர்வமாக இருந்தார் சிறப்பாக விளையாடியதின் காரணமாக தில்லி அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.
இதில் தனது திறமையால் அனைவரையும் ஈர்த்து 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் சர்வதேச கிர்க்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து அறிமுகமானார்.
தனது நிலையான ஆட்டத்தால் உலக அளவில் சிறந்த பேட்ஸ் மேன்களில் ஒருவராக உயர்ந்தார் விராட் கோலி.
இவர் 2023 ஆம் ஆண்டில் தனது 50ஆவது ஒரு நாள் சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி இந்திய அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக பணியாற்றி பல முக்கிய வெற்றிகளை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.
விராட் கோலி கிரிக்கெட்டில் மட்டுமல்லாது விளம்பர ஒப்பந்தங்கள் சமூக ஊடகங்கள் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் இருந்து பலவாறு வருமானத்தை பெற்று வருகிறார்.
இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 92 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ரிக்கி பாண்டிங் ( Ricky Ponting )
ரிக்கி பாண்டிங் இவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஒரு சிறந்த வலது கை பேட்ஸ்மேனும் ஆவர்.
இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா அணி பல கோப்பைகளை வென்று யாரும் அசைக்க முடியாத அளவிற்க்கு வலுவான அணியாக உலக அளவில் உருவெடுத்தது.
ரிக்கி பாண்டிங் 1995 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2002ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா அணி 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது 2012 ஆம் ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு அறிவித்தார் ரிக்கி பாண்டிங்.
ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு முதலீடுகளின் மூலம் மிகப்பெரிய செல்வத்தை சேர்த்து வைத்துள்ளார். அது மட்டுமல்லது இவர் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்கார விளையாட்டு வீரர்களின் ஒருவராக கருதப்படுகிறார்.
தற்போது கிரிக்கெட் ஆலோசகராகவும் நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
பிரைன் லாரா ( Brain Lara )
பிரைன் லாரா 1969 ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி டிரினிடாடில் பிறந்தார். இவர் மேற்கிந்திய அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார் இவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
1990 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் பிரைன் லாரா.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன் ஆவார். டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை லாரா படைத்துள்ளார் சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்க முடியவில்லை.
பிரைன் லாரா கிரிக்கெட்டின் மட்டுமல்லது விளம்பரங்கள் மற்றும் பல்வேறு முதலீடுகளில் இருந்து மிகப்பெரிய செல்வத்தை ஈட்டி வருகிறார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ்-ல் மிகவும் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் வீரர் ஆவார் இவர் தற்போது கிரிக்கெட் போட்டியின் நேரடி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் இவரின் சொத்து மதிப்பு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்
ஜாக் காலீஸ் ( Jacques Kallis )
ஜாக் கல்லீஸ் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் பிறந்தவர். சிறு வயதில் இருந்து கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் அதன் காரணமாக தென்னாப்பிரிக்க தேசிய அணியில் விரைவில் இடம் பிடித்து சிறந்த வலது கை பேட்ஸ்மேனாகவும், சிறந்த வலதுகை வேகப்பந்து பேச்சாளராகவும் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
ஜாக் கல்லீஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் 13289 ரன்களும் 292 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் மேலும் இவர் 328 ஒரு நாள் போட்டிகளிலும் 11579 ரன்களையும் 273 கிரிக்கெட்டுகளையும் எடுத்து சாதனை செய்துள்ளார்.
இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 48 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
வீரேந்திர சேவாக் ( Virender Sehwag )
விரந்த சேவாக் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பிறந்தார். இவர் அதிரடியான ஆட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.
உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரராக விளங்கினார்.
சேவாக், ஹரியானாவில் நஜஃப்கரில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார் பிறகு தனது கல்வியை முடித்தபின் முழுநேரமாக கிரிக்கெட்டில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் ஆவார். பாகிஸ்தானின் முல்தான் ஸ்டேடியத்தில் 2004 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்ததால் இவரை அனைவரும் “முல்தானின் சுல்தான்” என்று அழைப்பார்கள்.
கிரிக்கெட் மட்டுமல்லாது விளம்பரங்கள் கிரிக்கெட் பயிற்சி வழங்குதல், கிரிக்கெட் வர்ணனை மூலம் பலவாறு வீரேந்திர சேவாக் வருமானங்களை ஈட்டி வருகிறார் தற்போது இவரது சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
Read Also ; உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் யார்?
ஏபி டிவில்லர்ஸ் ( AB de Villiers )
ஏ பி டிவில்லியர்ஸ் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 17- ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரராக விளங்கினார்.
டி வில்லியர்ஸ்க்கு சிறு வயதில் இருந்தே பல விளையாட்டுகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இப்படி பல திறமைகளை கொண்டிருந்தாலும் டி வில்லியர்ஸ்க்கு கிரிக்கெட்டின் மீதே அவரது ஆர்வம் அதிகமாக இருந்தது.
24 ஆம் ஆண்டு டிவிலியர்ஸ் 10 ஆப்பிரிக்கா அடுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார் மைதானத்தில் 360 டிகிரியிலும் பந்தை அடிக்கும் திறமை இவருக்கு உண்டு அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை மிஸ்டர் 360 என்று செல்லமாக அழைப்பர். 2021 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.
கிரிக்கெட் மட்டுமின்றி பல நிறுவனங்களின் விளம்பர தூதுவராக இருப்பதன் மூலமாக அதிகமான வருவாய் ஈட்டுகிறார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.