உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் யார்?

உலகெங்கும் உள்ள விளையாட்டு வீரர்களின் மிகவும் பணக்கார 8 விளையாட்டு வீரர்களை இங்கே வரிசைப்படுத்தி உள்ளோம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து உலகின் ஒரு புதிய வரலாறு படைத்த பெயர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
 போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் தனது தனித்திறமையான கால்பந்து விளையாட்டின் மூலம் மிகச் சிறந்த வீரராக இன்றும் பலம் வந்து கொண்டிருக்கிறார் இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
போர்ச்சுகல் நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் கிறிஸ்டியான ரொனால்டோ.
ரொனால்டோவின் தந்தை சாதாரண தோட்டக்காரராகவும் தாய் சமையல் வேலையும் செய்து வந்தனர்.
 ரொனால்டோ குழந்தை பருவத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
பின்பு அவரின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் தனது தாய் நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்று பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்து.
 அதன் பிறகு உலகின் பல்வேறு கிளப்புகளில் விளையாடி உலக அளவில் புகழ்பெற்றார் அவர் மான்செஸ்டர் யுனைடெட்,  ரியல் மாட்ரிட்,  யுவெண்டஸ் போன்ற முன்னணி அணிகளில் விளையாடி அவர்களுக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.
அதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 2022 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நாசர் அணியுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 1770 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு கணக்கின்படி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர சொத்து மதிப்பு 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் விளையாட்டு ஒப்பந்தங்கள் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
 அவரது சொந்த பிராண்டான “CR7” என்ற நிறுவனத்தின் மூலம் கண்ணாடிகள் உள்ளாடைகள் வாசனை திரவியங்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை விற்பனை செய்து பெரும் வருவாய் ஈட்டி வருகிறார்.

ஜான் ராஹ்ம்

ஜான் ராஹ்ம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில் முறை கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவர். தற்போது உலகின் முன்னணி கோல்ஃப் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
 அவரது துல்லியமான ஷார்ட்கள் மற்றும் நீண்ட தூரம் அடிக்கும் திறன் ஆகியவை அவரை மற்ற வீரர்களிடமிருந்து கோல்ஃப் விளையாட்டில் மாறுபடுத்தி காட்டுகிறது அவர் எந்த போட்டிக்கு சென்றாலும் அதை வெல்லும் எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் விளையாடுவார்.
ஜான் ராஹ்ம் கோல்ஃப் விளையாட்டு உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பணக்கார வீரர்களின் ஒருவராவார் இவரின் சொத்து மதிப்பு 218 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார் இவரது அற்புதமான கால்பந்தாட்ட திறமையின் மூலம் எண்ணற்ற கோள்களை அடித்து தான் சார்ந்த. அணிகளை வெற்றியை பெறச் செய்துள்ளார்.
அர்ஜென்டினாவில் பிறந்தவர் மெஸ்ஸி குழந்தை பருவத்தில் இருந்து கால்பந்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
தனது தனி திறமையால் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு பார்சிலோனா அகாடமியில் சேர்ந்தார் அங்கிருந்து மேலும் தனது திறமையை பல மடங்கு வளர்த்துக் கொண்டு உலக கால்பந்தில் தனக்கென்ன ஒரு மிகப்பெரிய சிம்மாசனத்தை உருவாக்கிக் கொண்டார்.
பார்சிலோனா கால்பந்து அணியில் பல ஆண்டுகாலம் விளையாடிய மெஸ்ஸி ஏராளமான கோப்பைகளை அந்த அணிக்காக வென்று கொடுத்தார்.
 காலப்போக்கில் அந்த அணியின் முக்கியமான வீரராக விளங்கினார்.
பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு இடம் மாறினார் அதனைத் தொடர்ந்து கடைசியாக அமெரிக்காவில் இன்டர் மியாமி அணிக்கு சென்று விளையாடி வருகிறார்.
தனது தாய் நாடான அர்ஜென்டினாவின் தேசிய அணிக்காக நீண்ட காலம் விளையாடி அர்ஜெண்டாவிற்க்கு கால்பந்து உலகக் கோப்பையை வென்று தந்து பெருமை சேர்த்தார்.
லியோனல் மெஸ்ஸி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்லாமல் வணிக உலகிலும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வந்துள்ளார் உலகின் பல்வேறு நிறுவனங்களில் விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் கனிசமான வருவாயை ஈட்டி வருகிறார்.
அவரின் சொத்து மதிப்பு வருடம் வருடம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது தற்போதைய நிலவரப்படி அவரின் சொத்து மதிப்பு 135 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்.

லெப்ரான் ஜேம்ஸ்

லெப்ரான் ஜேம்ஸ் பிரபலமான அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆக்ரன் நகரில் பிறந்தார். தனது சிறு வயதிலேயே கூடைப்பந்து ஆட்டத்தில் அசாதாரண திறமைகளை கொண்டு பல விளையாட்டு போட்டிகளில் விளையாடி வென்று வந்தார். அதற்க்கு அவரது உயரமும் முக்கிய காரணமாக இருந்தது.
தனது திறமையால் உயர்நிலைப் பள்ளி படிக்கும் காலத்திலேயே கூடைப்பந்து விளையாட்டில் உலக அளவில் பிரபலமானார்.
ஜேம்ஸ் தனது கூடைப்பந்து விளையாட்டு வாழ்க்கையில் பல முக்கியமான அணிகளுக்கு விளையாடி வந்துள்ளார் குறிப்பாக கிளீவ்லாந்து கவலியர்ஸ், மியாமி ஹீட், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் போன்ற அணிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி நான்கு NBA சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
லெப்ரான் ஜேம்ஸ் கூடைப்பந்து விளையாட்டு துறையில் மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவரது வருமானம், சம்பளம் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் அவரது சொத்து மதிப்பு மதிப்பு வருடம் தோறும் அதிகரித்து வருகிறது இதனால் அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
லெப்ரான் ஜேம்ஸ் தான் விளையாடும் அணிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மிகப்பெரிய வருமானத்தையும் அதேபோல பல்வேறு நிறுவனங்களில் தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலமாகவும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பல மடங்கு வருமானம் ஈட்டி வருகிறார்.
லெப்ரான் ஜேம்ஸ் தனது சொந்த நகரமான ஆக்ரனில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக “லெப்ரான் ஜேம்ஸ் ஃபேமிலி ஃபவுண்டேஷன்” என்ற அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்.
40 வயதிலும் சிறப்பாக கூடைப்பந்து விளையாடி வரும் லேப்ரான் ஜேம்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு 128.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ஜியன்னிஸ் அண்டெடோகோன்போ

ஜியன்னிஸ் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒரு தொழில் முறை கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிறந்தார். ஜியான்னிஸ் NBA யின் மிகச் சிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவராவார். இவரிடம் மிகப் பெரிய பலமாக இருப்பது இவரின் உயரமும் ஆட்டத்தின் வேகமும் மற்றவர்களைவிட மிகச் சிறந்த வீரராக தனித்தன்மையாக காட்டுகிறது.
இவரை கிரீஸ் மக்கள் “க்ரிக் பிளைங்” என்று அழைக்கிறார்க்ள்.
நைஜிராவில் பிறந்த ஜியான்னிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரீஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்தனர் ஏழ்மையான நிலையில் வளர்ந்த ஜானி எஸ் குழந்தை பருவத்தில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டிருந்தார்.
மிகவும் இளம் வயதிலேயே NBA வின் கவனத்தை ஈர்த்த ஜியான்னிஸ் மில்வாக்கி பாக்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் தனது தனித்திறமையை நிரூபித்து அணியின் முக்கிய வீரராக உயர்ந்து நின்றார்.
ஜியான்னிஸ் NBA சாம்பியன்ஷிப் MVP விருதுகள் என பலவற்றை வாங்கி சாதனையும் படைத்துள்ளார்.
ஜியான்னிஸ் கூடை பந்து விளையாட்டின் மூலமாக மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார் இதன் காரணமாக அவரின் சொத்து மதிப்பு 111 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கிலியான் எம்பாப்பே

கிலியான் எம்பாப்பே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஆவார். தற்போது இவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியில் விளையாடி வருகிறார் சிறுவயதில் இலிருந்தே இவர் காட்டும் வேகம் கோல் அடிக்கும் திறமை ஆகியவற்றால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சிறந்த வீரராக விளங்கி வருகிறார்.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பாரீசில் பிறந்தவர்தான் எம்பாப்பே. இவர் தனது கால்பந்தாட்ட வாழ்க்கையை மொனக்கோ கிளப்பில் இருந்து தான் தொடங்கினார்.
 அங்கு இவரது அசாதாரண திறமையை பார்த்து அனைவரும் மிரண்டு போயினர். 2017 ஆம் ஆண்டில் இவர் பாரிஸ் ஜெயிண்ட் ஜெர்மன் அணியுடன் இணைந்து அங்கு பல கோப்பைகளை வென்று கொடுத்தார்.
அத்தோடு அல்லாமல் அந்த அணியின் முக்கிய வீரராகவும் திகழ்ந்து வந்தார். 2023 ஆம் ஆண்டில் எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து தனது புதிய கால்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார்.
தன் தாய் நாடான பிரான்ஸ் தேசிய அணியிலும் எம்பாப்பே முக்கிய வீரராக பங்கு வைக்கிறார். 2018 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி வென்ற போது அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கிலியான் எம்பாப்பே.
கிலியான் எம்பாப்பே கால்பந்து விளையாட்டில் அதிகம் வருமானம் ஈட்டி வந்தாலும், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பல முதலீடுகளின் மூலமாக மிக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். அவரின் இன்றைய சொத்து மதிப்பு 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

நெய்மர்

நெய்மர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற மிகச் சிறந்த கால்பந்து வீரர் ஆவார். இவரின் அபார கால்பந்தாட்ட திறமையும் வேகமான நகர்வுகளும் அழகான கோள்களை அடிப்பதன் காரணமாக  உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் கிளப் அணிகளில் ஒன்றான சாண்டோஸில் தனது கால்பந்தாட்ட வாழ்க்கையை இளம் வயதிலேயே தொடங்கினார் நெய்மர்.
 பின்னர் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு மாறி அங்கு லியோனல் மெஸ்ஸி உடன் சேர்ந்து பல அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தி காட்டினார்.
 பின்னர் பாரிஸ் ஜெயிண்ட் ஜெர்மன் அணிக்காக அதிக தொகைக்கு ஓப்பந்தம் செய்யப்பட்டு விளையாடினார். லீக் 1 மற்றும் பிரெஞ்சு கப் போட்டிகளில் பல வெற்றிகளை அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.
நெய்மர் ஒரு பணக்கார கால்பந்தாட்ட வீரராக இருந்தாலும் அவர் நைக்கி, ரேபர் ஒமேகா போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் மிக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்.
அது மட்டுமில்லாமல் அவர் பல்வேறு வணிகங்களிலும் முதலீடு செய்து வருகிறார் அவரின் சொத்து மதிப்பு 108 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

கரீம் பென்சிமா

கரீம் பென்சீமா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது சவுதி அரேபியாவின் அல்-இத்திஹாத் அனியில் முன்னணி ஸ்டிரைக்கராக விளையாடி வருகிறார்.
கரீம் பென்செய்யுமா 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த தனது கால்பந்து விளையாட்டு பயணத்தை லியோன் நகரில் உள்ள உள்ளூர் கிளப்புகளில் இருந்து தொடங்கினார்.
பிரென்சிமாவின் தற்போதைய சொத்து மதிப்பு 106 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் கால்பந்து விளையாட்டு மற்றும் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து பலவாறு வருமானத்தை ஈட்டி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *