ஒரு நாட்டில் இருந்து ஒரு வீடு வரை ஒருவரின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள். அப்படிப்பட்ட பெண் சக்தியின் மூலமாகத்தான் இந்த உலகமே இயங்கி வருகிறது.
பெண்கள் உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களாகவும் தலைமை செயல் அதிகாரிகளாகவும் சிறப்பாக பணியாற்றி வெற்றி நடை போடுகிறார்கள் அவர்களில் சிறந்த 10 பேரை இப்போது பார்ப்போம்.
ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்
ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 1953 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் இவர் பிரபலமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
இவர் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண் ஆவார். இவர் உலகின் பிரபலமான அழகு சாதன நிறுவனமான லோரியல் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.
ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 1997 ஆம் ஆண்டில் அவர் லோரியல் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தார் இவரது குடும்பம் மட்டுமே லோரியல் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
2017 ஆம் ஆண்டில் இவரின் தாயார் லிலியன் பெட்டன்கோர்ட் இறந்தபோது அந்த நிறுவனத்தின் வாரிசு உரிமைகள் அனைத்தையும் இவர் பெற்றார்.
இவரின் சொத்து மதிப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 85.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
அலீஸ் வால்டன் (Alice Walton)
ப்ளீஸ் ஃபால்டன் உலகின் மிகப்பெரிய பெண் பணக்காரர்களில் ஒருவராவார் இவர் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வாட்மார்டை உருவாக்கிய சாம் வால்டனின் ஒரே மகள் ஆவார்.
அலீஸ் வால்டன் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் ஆவர், தன் குழந்தை பருவத்தில் இருந்து கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
சிறு வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து வாட்டர் பெயிண்டிங் வரைய கற்றுக்கொண்டார். பிறகு கலை வரலாறு மற்றும் அமெரிக்காவின் கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கியுள்ளார்.
இவரின் கலை ஆர்வம் எப்படிப்பட்டது என்றால் 2012 ஆம் ஆண்டு ‘கிரிஸ்டல் பிரிட்ஜஸ் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஆர்ட்’ என்ற இலவச கலை அருங்காட்சியத்தை நிறுவி பல மக்கள் அமெரிக்காவின் வரலாறை தெரிந்து கொள்ள உதவி வருகிறார்.
பெரும் பணக்கார பெண்ணாக இருந்தாலும் அவர் எளிமையான வாழ்க்கையவே வாழ்ந்து வருகிறார். தனது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை மற்றும் கல்வித் துறைகளில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
அவரின் இன்றைய சொத்து மதிப்பு 89.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Read Also ; உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார்?
ஜூலியா கோச் ( Julia Koch )
ஜூலியா கோச் உலகில் வெற்றிகரமாக பெண் தொழில் அதிபர் ஆவார் இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.
ஜூலியா கோச் தனது கணவர் டேவிட் கோச்சுடன் சேர்ந்து கோச் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெரும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் பெட்ரோலியம் , ரசாயனம் மற்றும் பல தொழில்களை உலகெங்கும் சிறப்பாக செய்து வருகிறது.
கோச் இண்டஸ்ட்ரியல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும் இந்த நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்தில் ஜூலியா கோச் இருந்து வருகிறார்.
ஜூலியா கோச்சும் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து, பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கல்வியை மற்றும் மருத்துவம் போன்ற துறைகளுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்து வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரான ஜூலியா கோச் அவர்களின் சொத்து மதிப்பு 74.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஜாக்குலின் மார்ஸ் ( Jacqueline Mars )
ஜாக்குலின் மார்ஸ் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் 1939 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி பிறந்தார். இவர் ஆண்டில் பிரின் மார் கல்லூரியில் மனிதவியல் துறையில் கல்லூரி பட்டம் பெற்றார்.
இவரின் பொழுது போக்காக இளமையிலேயே குதிரைகளில் சவாரி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.
ஜாக்குலின் மார்ஸ் தனது குடும்பத்தின் நிறுவனமான மார்ஸ் இன் கார்ப்பரேட் நிறுவனத்தில் 1980 இல் சேர்ந்து அந் நிறுவனத்தில் பல்வேறு உயர் பதவிகளில் வகித்து வந்தார். அப்போது தனது சகோதரர்களுடன் இணைந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.
ஜாக்குலின் மார்ஸ் கலை பெண்களின் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் அதேபோல தற்போது ஜாக்லின் மார்சின் சொத்து மதிப்பு 47.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சாவித்ரி ஜிண்டால் ( Savitri Jindal )
சாவித்திரி ஜிண்டால் இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். சாவித்திரி ஜிண்டால் 1950 மார்ச் 20ஆம் தேதி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தார்.
சாவித்திரி ஜிண்டால் அவர்கள் ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் அவர்களை 1970 இல் திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவரான ஓம் பிரகாஷ் ஜிண்டால் 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த காரணத்தினால் சாவித்திரி ஜிண்டால் அவர்கள் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த குழுமம் மிகப்ச்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்துள்ளார். ஜிண்டால் குழுமம் இரும்பு, மின்சாரம், சிமெண்ட் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
சாவித்திரி ஜிண்டால் ஒரு தொழில் அதிபர் மட்டுமல்ல மிகப்பெரிய அரசியல்வாதியும் கூட. இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைச்சராகவும் ஹிசார் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார பெண் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றார் சாவித்திரி ஜிண்டால் அவர்கள்.
சாவித்திரி ஜிண்டால் அவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு 39.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ரஃபேலா அபோண்டே
ரஃபேலா அபோண்ட் இத்தாலியைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்மணி ஆவார். இவர் “மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி” என்ற உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ஆவார்.
இவர் 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி இஸ்ரேலில் பிறந்தவர் ஆவார் இவரது பெற்றோர்கள் இவர் சிறு வயது இருக்கும் போதே இஸ்ரேலில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு குடி பெயர்ந்தனர்.
ரஃபேல தனது கனவர் ஜியான்லுயிகி அபோண்டுவுடன் சேர்ந்து 1970 ஆண்டு “மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி” என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கினார்.
இன்று அந்த நிறுவனம் உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. அந்த நிறுவனத்தின் கணிசமான முக்கிய பங்குகளை ரஃபேலா அபாண்டே வைத்துள்ளார்.
இவரின் இன்றைய சொத்து மதிப்பு 34.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
மெக்கென்சி ஸ்காட் ( MecKenzie Scott )
மெக்கென்சி ஸ்காட் இவர் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி சன் பிரான்சிஸ்கோவில் பிறந்தார் இவர் ஒரு பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் மிகப்பெரிய பெண் பணக்காரர் சமூக சேவகர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
மெக்கன்சி ஸ்காட் பவர் சிறு வயதிலேயே புத்தகம் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார் தான் சிறுவயதிலேயே “தீ புக்வார்ம்” என்ற 142 பக்கம் கொண்ட ஒரு நாவலையும் எழுதியுள்ளார். பின் 1987 ஆம் ஆண்டு கல்லூரி பட்டமும் பெற்றார்.
மெக்கன்சி ஸ்காட் தனது கணவர் ஜெஃப் பெசோஸ் உடன் சேர்ந்து அமேசான் என்ற நிறுவனத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்கினார். இந் நிறுவனம் இன்று உலகின் மிகப் பெரிய ஆன் லைன் விற்பனை நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
பின்னர் தனது கணவர் ஜெஃப் பெசோஸ்சுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இப்படி விவாகரத்து பெற்ற பிறகு அமேசான் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பங்குகளை இவர் பெற்றுக் கொண்டார் இதன் காரணமாக இவர் மிகப் பெரிய சொத்து மதிப்பிற்கு உரிமையாளர் ஆனார்.
மெக்கன்சி ஸ்காட் மிகப்பெரிய பெண் செல்வந்தராக இருந்தாலும் தற்போது அவர் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்
பெரும்பாலும் அவர் ஊடகங்களில் பேச விரும்புவதில்லை, தன்னிடம் இருக்கும் பெரும் பொருளாதாரத்தை சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களின் நலனுக்காக பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறார்.
மெக்கன்சி ஸ்காட் அவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு 33.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Read Also ; உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் யார்?
ஜினா ரைன்ஹார்ட் ( Gina Rinehart )
ஜினா ரைன்ஹார்ட் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பெண் தொழில் அதிபர் ஆவார் இவர் 1954 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் இவரது தந்தை ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்கங்களில் இருந்து இரும்பு தாதுகளை எடுக்கக்கூடிய ஹன்காக் பிராஸ்பெக்டிங் என்று நிறுவனத்தை உருவாக்கினார்.
ஜினா ரையின்ஹாட் தனது தந்தையான லாங்க்ஹார்ட் ஹன்காகின் மறைவுக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார் இவரின் தலைமையின் கீழ் அந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து அதிகமான லாபத்தையும் சம்பாதித்து வருகிறது.
தனது சொத்துக்களை பாதுகாக்க பல சட்டப் போராட்டங்களை நடத்தி தற்போது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக விளங்கி வருகிறார். தற்போது இவரின் சொத்து மதிப்பு 31.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அபிகெயில் ஜான்சன் ( Abigail Johnson )
அபிகெயில் ஜான்சன் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் பில்லியனர் ஆவார்.
இவத் ஃபிடெலிட்டி நிறுவனர் எட்வர்ட் ஜி ஜான்சனின் பேத்தி ஆவார். இவர் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவில் போஸ்டன் நகரில் பிறந்தார்.
அபிகெயில் ஜான்சன் ஹோபர்ட் மற்றும் வில்லியம் ஸ்மிக் கல்லூரிகளில் கலை வரலாற்று துறையில் பட்டம் பெற்றார். பின்னர் ஹவார்ட் பிசினஸ் ஸ்கூலில் எம் பி ஏ படித்து பட்டமும் பெற்றார்.
1988 ஆம் ஆண்டு அபிகெயில் ஜான்சன் ஃபிடெலிட்டி நிறுவனத்தில் பணியில் இணைந்த அவர். அந் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் ஃபிடெலிட்டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் ஃபிடெலிட்டி நிறுவனத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி அபிகெயில் ஜான்சனின் சொத்து மதிப்பு சுமார் 31.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
மிரியம் அடெல்சன் ( Miriam Adelson )
மிரியம் அடெல்சன் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அன்று இஸ்ரேலில் பிறந்தவர். அவர் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயாலஜி மற்றும் ஜெனிடிக் மருத்துவம் படித்தார் பின்னர் மருத்துவத் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
இஸ்ரேலில் பிறந்த மரியம் அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடி ஏறினார். அமெரிக்காவில் ஷெல்டன் ஏடெல்சனை சந்தித்து அவரை திருமணமும் செய்து கொண்டார்.
தனது கணவர் ஷெல்டன் ஏடெல்சன் மறைவிற்குப் பிறகு அவர் நடத்தி வந்த “லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் கார்ப்பரேஷன்” என்ற கேசினோ நிறுவனத்தை பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டு தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவர் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் நிறைய பொருளாதார உதவிகளை செய்து வருகின்றார். மிரியம் அடெல்சனின் தற்போதைய சொத்து மதிப்பு 29.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.