2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. கடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இதில் பங்கேற்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெறுகின்றது.
ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி பிறகு இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்திய அணியின் பங்கேற்பு
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களான பிரச்சினைகளால் இந்திய அணி பாகிஸ்தானில் பங்கேற்பது குறித்து விவாதங்கள் எழுந்தன.
இரு கிரிக்கெட் வாரியங்களுடன் Don’t இணைந்து இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்தும் ‘ஹைபிரிட் மாடல்’ என்ற ஏற்பாட்டை செய்துள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் மட்டுமே தங்களது போட்டிகளை விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முக்கியத்துவங்கள்
சாம்பியன்ஸ் டிராபி என்பது உலகின் மிக முக்கியமான ஐசிசி கிரிக்கெட் தொடர் ஆகும். இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் முக்கியமான தொடர் ஆகும். இந்தத் தொடரில் வெற்றி பெறுவது அணிகளுக்கு பெருமை சேர்க்கும்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியம் ட்ராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் ஏற்பாடுகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன் ட்ராபி தொடரை லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் மேம் படுத்தி போட்டிகளை நடந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் போட்டியை நடத்தி ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான திட்டங்களை பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது.
Read Also ;தலை சிறந்த ஆல்ரவுண்டர் கபில் தேவ்
சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்திய அணி பங்கேற்க்காத காரணத்தால் போட்டிகளை மாற்றி அமைத்தது குறித்து ஏற்பட்ட சவால்களால் தற்போது தீர்ந்துள்ளாதால். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கிறார்கள்.
உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணிகள் மோதும் இந்த முக்கியமான தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் 2025, உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பெரும் போட்டி ஆகும்.
இந்தச் சீசனின் சாம்பியன் ட்ராபி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஏற்பாடு செய்யும் மிக முக்கியமான டைட்டில் போட்டிகளில் ஒன்றாகும்.
1998-ஆம் ஆண்டில் தொடங்கிய சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் தொடர், உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாக திகழ்கிறது.
முக்கிய வீரர்கள்
சாம்பியன் ட்ராபி 2025 தொடர் உலகின் மிக முக்கியமான முன்னணி வீரர்கள் பலரும் பற்கேற்பது ரசிகர்களுக்கு பெரிய அனுபவத்தை வழங்கும்.
இந்தியா அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக் போன்ற முன்னனி வீரர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நிலையா ஃபார்மை இழந்து போராடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்க்கு இது ஒரு திருப்புமுனையான தொடராக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதேசமயம் உலகின் இளம் கிரிக்கெட் வீரர்களும் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை மற்றும் வரலாறு
சாம்பியன் ட்ராபி, பல திகில் மிக்க தருணங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் ட்ராபியில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
2025 சாம்பியன் ட்ராபி, புதிய சாதனைகளை உருவாக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். இதனால் உலகின் கண்கள் எல்லாம் பாகிஸ்தானை நோக்கி திரும்பியுள்ளன.
சமூக மற்றும் பொருளாதார தாக்கம்
ஐசிசி சாம்பியன் ட்ராபி 2025 பாகிஸ்தான் நாட்டிற்க்கு சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் பயன்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்கள் சாம்பியன் ட்ராபி போட்டிகளை காண வருவதன் மூலம் பாகிஸ்தானின் உள்ளூர் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அதிகளவில் வளர்ச்சி அடையும் என பாகிஸ்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் 2025 உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாக நிகழ்வாக இருக்கும்.
பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் உலகின் சிறந்த வீரர்கள் மற்றும் தரமான போட்டிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தையும் அதன் எதிர்பார்ப்பையும் இந்த உலகிற்கு மறுபடியும் நினைவூட்டும் நிகழ்வாக இருக்கும்.
Read Also ;உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார்?
சாம்பியன்ஸ் டிராபியின் முக்கிய சாதனைகள்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரு முறை சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இரு முறை வென்றுள்ளது (2006, 2009).
இந்தியா இரண்டு முறை சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்றதுள்ளது 2002-ல் (ஶ்ரீலங்காவுடன் பகிர்ந்துகொண்டது).
2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியடி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்றது.
நியூசிலாந்து அணி 2000-ல் இறுதி போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வென்று முதல் முதலாக சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்றது.
ஶ்ரீலங்கா அணி 2002-ல் இறுதி போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்து முடித்த பிறது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களத்தில் இறங்கிய சில நிமிடங்களிலே மழை பெய்தது ஆட்டம் தடை பட்ட காரணத்தால் கோப்பையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க்கும் அணியின் வீரர்களின் பெயர்களை இங்கே பார்ப்போம்..
முதலில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களின் பட்டியல். பாட் கம்மின்ஸ் (c), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லாபுசேன், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், மிட்செல் மார்ஷ், ஆடம் ஜம்பா, ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மத்தேயு ஷார்ட், டிராவிஸ் ஹெட்,ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் விபரம்.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c),செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, நூர் அகமது, ஏஎம் கசன்பர், அஸ்மத்துல்லா உமர்சாய்,
ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி, ஃபசல் ஹக் ஃபாரூக்கி, இக்ராம் அலிகில், இப்ராஹிம் சத்ரான், குல்பாதின் நைப், நவீத் சத்ரன், ரஷித் கான், ஃபரித் அகமது மாலிக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் தலைமையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, வீரர்களின் விபரம்.
ஜோஸ் பட்லர் (c & wk), பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் டக்கெட், ஜோ ரூட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், பில் சால்ட்,
ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன்,
மார்க் வூட் ஆகிய வீரரகள் பங்கேற்கின்றனர்.
வங்க தேச அணி நஜ்முல் ஹொசைன் சாண்டோ (c) தலைமையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் விபரம்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (c)
மஹ்முதுல்லாஹ், பர்வேஸ் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ்,
நசும் அகமது, டவ் ஹித் ஹ்ரிடோய், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன், சௌமியா சர்க்கார், தஸ்கின் அகமது, நஹித் ராணா,
முஸ்தாபிசுர் ரஹ்மான், ஜாக்கர் அலி போன்ற வீரர்கள் பங்கெற்கின்றனர்.
நியூசிலாந்து அணி மிட்செல் சான்ட்னர் (c) தலைமையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் விபரம்.
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரன், கேன் வில்லியம்சன், டாம் லாதம், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், வில் யங்,
க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (c), நாதன் ஸ்மித், பென் சியர்ஸ், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, வில் ஓ ரூர்க் போன்ற வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி டெம்பா பவுமா (c) தலைமையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் விபரம்.
டெம்பா பவுமா (சி), ஐடன் மார்க்ராம், ககிசோ ரபாடா, டோனி டி ஜோர்ஜி, டேவிட் மில்லர், ரியான் ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், வியான் முல்டர், தப்ரைஸ் ஷம்சி, ஹென்ரிச் கிளா சென், லுங்கி இன்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரஸ்ஸி வான் டெர் டுசென் போன்ற வீரகள் பங்கேற்கின்றனர்.
இன்னும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க்கும் வீரர்களை வெளியிடவில்லை.
இதனிடையே இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் தனது ஃபார்மை இழந்து தவித்து வருகின்றனர் இதில் ரோஹித் சர்மாவிற்க்கு ஐசிசி நடத்தும் தொடர் என்றாலே அங்கு ரோகித்தின் பேட்டிங் வேற லெவலில் இருக்கும்.
ஏனென்றால் ஜசிசி போன்ற பெரிய போட்டிகளில் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்வார். பார்மில் இல்லாத நிலையில் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக பேட் செய்வதற்காகவே இந்த தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ரோகித். நம்மை பொறுத்தவரை இழந்த பார்ம்மை சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடி மீட்டெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் சிறப்பாக ஆடுவதும் மட்டும் இல்லாமல் அந்த கோப்பையையும் வாங்கினார் என்றால் அவருக்கு அது சிறந்த பிரியா விடையாக அமையும்.
ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று தகவல்கள் ஒவ்வொரு நாளும் உலா வந்து கொண்டிருக்கிறது.
விராட் கோலியை பொறுத்தவரை ரஞ்சி ட்ராபி போட்டியில் ஆடுவதில் சிக்கல் உள்ளதாக புதிதாக காரணம் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டில் தான் விராட் கோலி கடைசியாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.
இதனிடையே விராட் கோலி டெல்லி மாநில வீரர்களுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என டெல்லி மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.