2024- ஆம் ஆண்டு இந்தியாவில், இந்தியர்களால் அதிகம் வாங்கப்பட்ட சிறந்த 6 கார்களை வரிசைப்படுத்தி, அதன் விவரஙகளையும் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
6. மாருதி பிரீஸ்ஸா
மாருதி பிரீஸ்ஸா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவியாக திகழ்கிறது. 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கிய அம்சங்கள்
பிரீஸ்ஸாவின் வெளிப்புற வடிவமைப்பு அதிநவீனமாக பரந்த தாழ்வாய்ந்த கிரில், LED ஹெட்லாம்புகள், DRL (Daytime Running Lights), மற்றும் ஸ்டைலிஷ் அலாய் வீல்களுடன் அனைவரும் விரும்பக்கூடி அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது
பிரீஸ்ஸா புதிய K15C ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினுடன், லிட்டருக்கு 19-20 கிமீ வரை சிறப்பான மைலேஜ் கொடுக்கிறது.
பிரீஸ்ஸாவின் உள் கட்டமைப்பு விசாலமான வசதியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை தருகிறது.
9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் , ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் ஹெட்அப் டிஸ்ப்ளே ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிலைப் படுத்துவதற்க்காக மாருதி பிரீஸ்ஸா 6 ஏர்பேக்குகள், ABS பிரேக் சிஸ்டம், EBD, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் கொண்ட வசதிகளுடன் வருகிறது.
மேலும், இது GNCAP கார் பாதுகாப்பு சோதனையில் 4-நட்சத்திர மதிப்பெண் பெற்றுள்ள காராகும்.
பிரீஸ்ஸா அறிமுகத்திலிருந்து இன்று வரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனையை செய்துள்ளது.
பிரீஸ்ஸா கார்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது, இதன் விலை ₹8.29 லட்சம் முதல் ₹14.14 லட்சம் வரை உள்ளது. வாடிக்கையாளர்கள் தனது தேவைக்கு ஏற்ப மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மாடல்களில் தேர்வு செய்யலாம்.
5. மாருதி வேகன் ஆர்
குடும்பத்திக்கு ஏற்ற எளிய மற்றும் நம்பகமான கார், மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தைக்கு வழங்கிய வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக மாருதி வேகன் ஆர் (Maruti Wagon R) உள்ளது.
1999 ஆம் ஆண்டில் அறிமுகமான மாடல் ஆகும், மாருதி வேகன் ஆர் இந்திய குடும்பங்களுக்குப் ஏற்ற மற்றும் மிகவும் நம்பகமான வாகனமாக திகழ்ந்து வருகிறது. அதன் எளிய வடிவமைப்பு, செளகரியமான உட்புற அமைப்பு இதன் தனித்துவமாக பார்க்கப்படுகிறது.
மாருதி வேகன் ஆர் கார் உயரமான மற்றும் செவ்வக வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
வேகன் ஆர் மாடல்களில் பெட்ரோல் மற்றும் CNG இரண்டு வகையில் கிடைக்கின்றன. இது மைலேஜ்ஜை விரும்பக்கூடிய பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாடலாக திகழ்கிறது.
சிறப்பம்சங்கள்
புதிய வேகன் ஆர் K10C DualJet Dual VVT எனப்படும் பெட்ரோல் எஞ்சினை கொண்டது,
பெட்ரோல் மாடல்களுக்கு சுமார் லிட்டருக்கு 24 கிமீ வரை மைலேஜ் கொடுக்கின்றது. CNG மாடல்களுக்கு சுமார் கிலோவிற்க்கு 34 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது.
ABS பிரேக் சிஸ்டம், EBD, டூயல் ஏர்பேக், மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவைகள் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாகும்.
புதிய மாடல்களில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன், ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் பக்க பார்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா வசதிகள் இதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்குகின்றன.
மாருதி வேகன் ஆர் மாடல்களின் ஆரம்ப விலை சுமார் ₹5.54 லட்சம் ஆகும். இது பொருளாதார ரீதியாக பலருக்கும் எட்டக்கூடியதாக விலையில் உள்ளதால். இந்திய கார் சந்தையில் முன்னிலையில் உள்ளது.
மாருதி வேகன் ஆர் அதன் நம்பகத்தன்மை, எளிமையான பராமரிப்பு செலவு மற்றும் அதிகமான ரீசேல் மதிப்பு உள்ளதால் மிடில் கிளாஸ் மக்கள் இந்த மாடலை மிகுந்த ஆர்வத்துடன் தேர்ந்தெடுக்கின்றனர்.
Read Also ; கேரளாவின் குப்பை தொட்டியாக மாறிவரும் தமிழ்நாடு?
4. ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவின் எஸ்யூவி வகை வாகன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒரு கார் ஆகும்.
2015 ஆம் ஆண்டில் அறிமுகமான செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா, அதன் தரமான வடிவமைப்பும், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் துல்லியமான செயல்திறனால் குறுகிய காலத்திலேயே மக்களின் விருப்பக் காராக வளர்ந்தது.
க்ரெட்டாவின் சிறப்பம்சங்கள்
க்ரெட்டா காரின் மாடர்ன் மற்றும் தைரியமான தரமான வடிவமைப்பு, அதில் உள்ள கவர்ச்சிகரமான “பாரமெட்ரிக் கிரில்” மற்றும் ஸ்ப்ளிட் LED ஹெட்லாம்புகள் அதற்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கிறது. பயணம் செய்வோருக்கு செளகரியமான அனுபவத்தை கொடுக்கிறது.
ஹூண்டாய் க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் என என இருவகை எஞ்சின்களில் கிடைக்கிறது, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று வகைகளில் கிடைக்கிறது.
6 ஏர்பேக், ABS பிரேக் சிஸ்டம், EBD, ESC மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை ஹூண்டாய் க்ரெட்டா வாங்குவோரின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றது.
ISOFIX, டயர் பிரஷர் மோனிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற சிறப்பு அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டத்துடன் வருகிறது. பனாராமிக் சன்ரூப், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற லக்ஷுரி அம்சங்கள் நல்ல பயண அனுபவத்தை கொடுக்கிறது.
ஹூண்டாய் க்ரெட்டா அதன் பல்வேறு வேரியண்டுகளுடன் மிடில் கிளாஸ் முதல் உயர்ந்த வர்க்கம் வரை உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது,
-இந்திய சந்தையில் இது மறுவிற்பனையில் நல்ல மதிப்பையும் பெறுவதோடு குறைந்த பராமரிப்பு செலவின் காரணமாக வாடிக்கையாளர்களின் முதல் தேர்வில் ஹூண்டாய் க்ரெட்டா இருக்கிறது.
வாடிக்கையாளர் பாராட்டு
க்ரெட்டா எஸ்யூவி வகையின் அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டிருப்பதுடன், மிகச்சிறந்த விலை/திறன் சமநிலையை அளிக்கிறது. குறிப்பாக, இதன் ஆடம்பரமான உள்ளமைப்பு மற்றும் செயல்திறன், நவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளது என்பதால், இது வாடிக்கையாளர்களின் முழுமையான அனுபவத்தை உயர்த்துகிறது.
3. மாருதி டிசையர்
மாருதி டிசையர் (Maruti Dzire) இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்த ஒரு பிரபலமான செடான் காராகும். ஹேட்ச்பேக் மாடலில் ஸ்விஃப்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி டிசையர் ஒரு அழகிய செடான் வடிவமைப்பையும், செயல்திறனையும் வழங்குகிறது.
மாரிதி டிசைர் 2008 ஆம் ஆண்டில் அறிமுகமாக் படுத்தப்பட்டது, அதன் எளிமையான வடிவமைப்பாலும் நம்பகத்தன்மையாலும் இந்திய மக்களின் விருப்பமான மாடலாக உள்ளது
மாருதி டிசைர் காம்பாக்ட் செடான் வகை கார் ரகத்தை சேர்ந்தது, இதன் இஞ்சின் புதிய K12N DualJet பெட்ரோல் எஞ்சின், லிட்டருக்கு 22-24 கிமீ என்ற வகையில் மைலேஜ் கொடுக்கிறது, பரவலான உட்புற இடவசதியை கொண்டும், பலருக்கும் ஏற்ற விலையில் கிடைக்கிறது.
முக்கிய அம்சங்கள்
மாருதி டிசையர், தனது நேர்த்தியான செடான் வடிவத்துடன் கண்களை கவர்கிறது. அகலமான விளக்குகள், கிரில் டிசைன் மற்றும் மென்மையான தோற்றமும் இதன் தரத்தையும் அழகையும் உணர்த்துகின்றன.
மாருதி டிசையர் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காராகும்.
டூயல் ஏர்பேக், ABS (Anti-lock Braking System) EBD (Electronic Brakeforce Distribution) ISOFIX குழந்தைகளுக்கு சீட் மவுண்ட், பார்கிங் சென்சார் போன்ற பாதுகாப்புக்கு என்ற சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,
ஆப்பிள் கார்பிளே மற்றும் Android Auto compatibility, ஸ்மார்ட் கீ லெஸ் என்ட்ரி
பின்பக்க கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் பயணத்தை நமக்கு மேலும் வசதியாக்குகின்றன.
மாருதி டிசைர் காரை மக்கள் அதிகமாக விரும்ப காரணம் குறைந்த பராமரிப்பு செலவு, எப்போது காரை விற்றாலும் நல்ல விலையில் விற்க்க முடியும், நல்ல மைலேஜ் கொடுப்பதும் முக்கிய காரணங்களாகும்..
2. டாடா பன்ச் – மைக்ரோ எஸ்யூவி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது இந்த டாடா பன்ச், இந்த கார் மாதம் ஒன்றிர்க்கு ஆவரேஜ்ஜாக 14,153 யூனிட் விற்பனை ஆகிறது
இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது டாடா பன்ச் மாடல் தான்.
டாடா பன்ச் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்தே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது வருகிறது. அதன் அதிநவீன வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவையால் டாடா பன்ச் மற்ற கார்களிலிருந்து தனித்து வேறுபட்டு நிற்க்கிறது
டாடா பன்சின் சிறப்பம்சங்கள்
டாடா பன்ச் ஒரு மைக்ரோ எஸ்யூவியாக இருந்தாலும், முழுமையான எஸ்யூவியின் தோற்றத்தை போலவும் திடமான வடிவமைப்பை கொண்டுள்ளது.
ஃப்ரண்ட் கிரில், ஷார்ப் எல்.இ.டி. லைட் டிஆர்எல் (Daytime Running Lights), மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்க்கு கூடுதல் அழகை சேர்க்கிறது
டாடா பன்ச் 1.2 லிட்டர் ரெவிட்ரான் பெட்ரோல் எஞ்சினை கொண்டது, இதன் மைலேஜ் லிட்டருக்கு 18-20 கிலோ மீட்டர் வரை கொடுக்க கூடியதாகும்
டாடா பன்ச் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு வகைகளில் கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களில் டாடா பன்ச் ஒரு முன்னோடியாக திகழ்கிறது, குளோபல் NCAP தரச் சான்றிதழ்படி, டாடா பன்ச் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது, டாடா பன்ச் இந்தியாவின் மிகச் சிறந்த பாதுகாப்பு வழங்கக்கூடிய மைக்ரோ எஸ்யூவியாக உயர்ந்து நிற்கிறது.
ABS பிரேக் சிஸ்டம் EBD, டூயல் ஏர்பேக், ISOFIX சீட் மவுண்ட், மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கட்டுப்பாடு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
இண்டீரியர் பார்த்தால் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கொண்ட இருக்கைகள். 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வாய்ஸ் கண்ட்ரோலர், டிக்கி ஸ்பேஸ் 366 லிட்டர் அளவை கொண்டதாகும்.
டாடா பன்ச்-ன் விலை இந்திய மதிப்பில் ₹6 லட்சம் முதல் ₹9.50 லட்சம் வரை உள்ளது.
டாடா பன்ச் புரொஜெக்ட் பியூர், அட்வென்ச்சர், அகாமா, மற்றும் கிரியேட்டிவ் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கிறது
1, மாருதி ஸ்விஃப்ட்
இந்திய கார் சந்தையில் நீண்ட நாட்களாக அதிகம் விற்பனையாகும் ஒரு பிரபலமான கார் தான் மாருதி ஸ்விஃப்ட்.
மாருதி சுஸுகி நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் இந்த காரை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, ஒவ்வொரு வருடமும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகளுடன், மற்றும் அதிக செயல்திறனுடன் வெளிவந்து மாருதி ஸ்விஃப்ட் தொடர்ந்து வெற்றியை குவித்து வருகிறது.
எஞ்சின் திறன்
ஸ்விஃப்டில் புதிய K12N DualJet பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் ஆகும், மேலும் 22-24 கிமீ/லிட்டர் மைலேஜ் ஸ்விஃப்டின் மிகப் பெரிய பலமாகும்
முக்கிய அம்சங்கள்
ABS பிரேக் சிஸ்டம், EBD, டூயல் ஏர்பேக், மற்றும் ISOFIX சீட் மவுண்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களும். மாடர்ன் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் பின்பகுதியில் பார்கிங் சென்சார்கள் ஸ்விஃப்டின் முக்கிய அம்சங்களாகும்.
மாருதி ஸ்விஃப்ட்-ன் விலை இந்திய
மக்களின் தேவைக்கு ஏற்றார்போல இருப்பதால் இளைஞர்கள், மிடில் கிளாஸ் மக்களின் முதன்மையாக தேர்வாக மாருதி ஸ்விஃப்ட் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.