4 வகை மட்டன் சூப் செய்வது எப்படி

4- வகையான மட்டன் சூப், அதை எவ்வாறு செய்யவது என்பது பற்றி முழுமையாகவும் விரிவாகவும் பார்ப்போம்

ஆட்டுக்கால் சூப்

தேவையான பொருள்கள்
4 ஆட்டுக்கால்
2 தக்காளி
15 to 20 சின்ன வெங்காயம்
3/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
2 மேஜைக்கரண்டி மிளகு
5 சிவப்பு மிளகாய்
1 1/2 மேஜைக்கரண்டி தனியா
1 இஞ்சி துண்டு
14 பூண்டு பல்
1 மேஜைக்கரண்டி சீரகம்
1 மேஜைக்கரண்டி சோம்பு
1 பட்டை துண்டு
2 கிராம்பு
1 நட்சத்திர பூ
கொத்தமல்லி சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் ஆட்டுக்காலை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 5 சிவப்பு மிளகாய், ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு தனியா, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, மற்றும் 2 மேஜைக்கரண்டி மிளகு சேர்த்து அதை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
நன்றாக வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, ஒரு நட்சத்திர பூ, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் 14 பல் பூண்டு சேர்த்து அந்த சூட்டிலேயே சிறிது வறுத்து அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்திருக்கும் ஆட்டுக் கால்களை போடவும்.
அதனுடன் முக்கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சுமார் 10 லிருந்து 12 விசில் வரும் வரை அதை வேக விடவும்.
ஆட்டுக்கால் வேகுவதற்க்குள் நாம் வறுத்து எடுத்து ஆற வைத்திருக்கும் மசாலா பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
12 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே சிறிது நேரம் வைக்கவும்.
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிதளவு அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்ததும் அதை குக்கரில் இருக்கும் ஆட்டுக்கால் உடன் ஊற்றி நன்கு கலந்து சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை அதை கொதிக்க வைக்கவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
12 நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்புக்கு மிகவும் சத்தான ஆட்டுக்கால் சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

மட்டன் நெஞ்செலும்பு சூப்

தேவையான பொருள்கள்
250 கிராம் நெஞ்செலும்பு கறி
12 to 14 சின்ன வெங்காயம்
1 தக்காளி
4 to 5 பல் பூண்டு
3 to 4 கிராம்பு
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1 மேஜைக்கரண்டி சோம்பு
1 மேஜைக்கரண்டி சீரகம்
1 மேஜைக்கரண்டி மிளகு
1 மேஜைக்கரண்டி தனியா
1 துண்டு பட்டை
1 பிரியாணி இலை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
மட்டன் நெஞ்செலும்பு சூப்
செய்முறை
முதலில் தக்காளி, ஸ்பிரிங் ஆனியன், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைத்து, மட்டன் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மிளகு, தனியா, மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டன் நெஞ்செலும்பு கறியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மசாலாவிலிருந்து ஒரு மேஜைக்கரண்டி, கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 10 விசில் வரும் வரை வேக விடவும். (சுமார் மூன்று அல்லது மூன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
10 விசில் வந்ததும் குக்கரின் மூடியை திறந்து மட்டன் நெஞ்செலும்பு சூப்பை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தூவி அதை எடுத்து ஒரு கின்னத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

மட்டன் சூப் – 1

தேவையான பொருள்கள்
மட்டன் எலும்பு – 150 கிராம்
சீரகம் – அரை மேசைக்கரண்டி
மிளகு – அரை மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
பிறகு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
சூடாகப் பரிமாற சுவையான மட்டன் சூப் ரெடி.

மட்டன் சூப்

தேவையான பொருள்கள்
மட்டன் – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – ஒன்றரை தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சீரக தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சோம்பு தூள் – கால் தேக்கரண்டி
பாதாம் பருப்பு – 15
பட்டை – ஒன்று
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
புதினா – ஒரு கொத்து
மல்லித் தழை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க
செய்முறை
பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரசர் குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போட்டு ஒரு தேக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் அதில் அரைத்த பாதாமை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, புதினா, மல்லித் தழை சேர்த்து தாளிக்கவும்.
சூப்பில் தாளித்தவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான மட்டன் சூப் தயார்.

நெத்திலி

நெத்திலி நெத்திலி கருவாட்டு குழம்புமீன் வறுவல்…..
தேவையான பொருள்கள்
நெத்திலி கருவாடு – 1 கப்
கத்திரிக்காய் – 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
வறுத்த அரிசி மாவு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தயிர் சிக்கன் கிரேவி பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி..

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலை ஒன்று
எண்ணெய் தேவைக்கேற்ப
பட்டை 2
ஏலம் 2
கிராம்பு 2
வெங்காயம் ஐந்து
இஞ்சி பூண்டு விழுது நான்கு டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினா 2 கைப்பிடி
பச்சை மிளகாய் நான்கு
மிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா தூள் மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தக்காளி நான்கு
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
தேங்காய் அரை மூடி (அரைத்து பால் எடுத்து கொள்ளவும்)
செய்முறை :
 ஆட்டு தலை சுத்தம் செய்து வாங்கி வரவும். அதில் நிறைய நொறுக்கு எலும்பு இருக்கும்.
 அதில் உள்ள நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கிற வெந்நீரில் போட்டு தோலை பிரித்தெடுக்கவும்.
 ஆட்டு தலை நன்கு கழுவி எடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
 தனியாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
 பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கிளறவும். தீயை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
 கடைசியில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட்டு வெந்ததும் இறக்கவும்.
 இது உடம்புக்கு ரொம்ப நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *