4- வகையான இறால் ரெசிபி மற்றும் மீன் பிரியாணி

4- வகையான இறால் ரெசிபிகள் மற்றும் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்

இறால் தொக்கு செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.

கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.

சாதத்துடன் சூடாக இறால் தொக்கை பறிமாற அட்டகாசமான காம்பினேஷாக இருக்கும்!!

இறால் கிரேவி செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

இறால் – 1 கப் (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது
அரைப்பதற்கு
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் இறாலை நீரில் நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 3 நிமிடம் இறால் சுருங்கும் வரை கிளறி, பின் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, இறால் மென்மையாக வெந்தமும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, எண்ணெயும், கிரேவியும் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், இறால் கிரேவி ரெடி

Read Also ; 4 வகை மட்டன் சூப் செய்வது எப்படி

செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருள்கள்
இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 5 பல் (அரைத்தது)
பச்சை மிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இறால் சில்லி 65 செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

இறால் – 20
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1/4 கப்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிது

செய்முறை

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி.

Read Also ; பும்ராவின் பத்து வீச்சு யுக்தி எப்படி சாத்தியம் ஆகிறது

மீன் பிரியாணி

தேவையான பொருள்கள்
1/2 கிலோ மீன்
1/2 கிலோ பாசுமதி அரிசி
3 தக்காளி
1 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
1 எலுமிச்சம்பழம்
1/4 கப் தேங்காய்
1 கப் தேங்காய் பால்
1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
1/4 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
1/4 மேஜைக்கரண்டி சோம்பு தூள்
1/2 மேஜைக்கரண்டி சோம்பு
5 துண்டு இஞ்சி
13 பூண்டு பல்
6 கிராம்பு
8 ஏலக்காய்
2 துண்டு பட்டை
1 பிரியாணி இலை
1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா
8 to 10 முந்திரி
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
மிளகாய் தூள் தேவையான அளவு
சிறிதளவு புதினா
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு basin ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *