2025-ல் உலகின் முதல் 10 பணக்காரர்கள் யார்?

எலான் மாஸ்க்

எலான் மாஸ்க் உலகின் முன்னணி தொழில் அதிபர் ஆவார். இவர் தொழில் முனைவதோடு இல்லாமல் விண்வெளி ஆராய்ச்சி செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
 எலான் மாஸ்க் ஜூன் 28,  1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தா. சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் டெக்னாலஜி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தன்னுடைய 12 வயதிலேயே பிளாஸ்டர் என்ற வீடியோ கேமை உருவாக்கி அதை 500 டாலருக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார்.
பிறகு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கே பல நிறுவனங்களைத் தொடங்கி தற்போது உலகின் முதன்மையான பணக்காரராக விளங்கி வருகிறார்.
2004 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் தற்போது உலகம் முழுவதும் அதிகமான விற்பனையாம் EV வாகனமாக திகழ்கிறது.
2024 ஆம் ஆண்டின் கடைசியில் எலான் மாஸ்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த சொத்து மதிப்பு உலக சாதனையை படைத்துள்ளது. இதுவரை யாரும் எட்டாத சொத்து மதிப்பை எலான் மாஸ்க் உருவாக்கியுள்ளார்.
இப்பேற்பட்ட சொத்து மதிப்பை உருவாக்க அவரின் புதுமையான சிந்தனையும் துணிச்சலான முயற்சியுமே அவரை இந்த முதல் இடத்தில் வைத்திருக்கிறது.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னால் தலைமை செயல் அதிகாரியும் ஆவார் இவர் 1964 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று அமெரிக்காவில் பிறந்தவர் உலக அளவில் தொழில்நுட்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
ஜெப் பெசோஸ் புருஷன் பிரின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு 1994 ஆம் ஆண்டு தனது வீட்டின் காரேஜில் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.
ஆரம்ப காலத்தில் அமேசான் நிறுவனம் ஆன்லைனில் புத்தகம் விற்கும் நிறுவனமாக தொடங்கப்பட்டது ஆனால் இன்று அமேசான் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது அது மட்டுமல்ல அது அமேசான் பிரைம், அமேசான் வெப் சர்வீஸஸ் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
எலான் மாஸ்கை போன்று விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபட்டு கொண்டவர் அதன் காரணமாக ப்ளூ ஆர்ஜின் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியை  ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ “ஆர்ஜின் நிறுவனம்” செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாத 2023ல் தி வாஷிங்டன் போஸ்ட் என்ற உலகின் மிகப் பிரபலமான பத்திரிகையின் நிறுவனத்தையும் வாங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
2025 இல் சொத்து மதிப்பு சுமார் 233.5 பில்லியன் டாலர்களாகும். இவர் உலகின் முன்னனி பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் அல்லது இரண்டாம் இடங்களை அடிக்கடி பெறுவார்.

லாரி எல்லிசன்

லாரி எலிவேஷன் உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்கள் ஒருவராவார் Oracle கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார்.
தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் லாரி எல்லிசன். அவரது சொத்து மதிப்பு அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தாலும் உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலின் வரிசையில் எப்போதும் அவர் பெயர் இடம் பிடித்துக் கொண்டே இருக்கும்.
 லாரி எலிசன் ஒரு வித்தியாசமான மனிதர் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பக் கூடியவர். அவருக்கென பல பங்களாக்கள் படகுகள் , ஜெட் விமானங்கள் என பலவற்றை வைத்திருக்கிறார்.
லாரி எல்லிசன் பழங்கால கலைப் பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். உலகம் முழுவதும் சென்று பல கலைப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.
பணம் சம்பாதிப்பதோடு இல்லாமல் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார் குறிப்பாக மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் அதிகமான நன்கொடைகளை வழங்கி அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
லாரி எல்லிசனின் 2025ல் சொத்து மதிப்பு 209.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறார்..

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் உலகில் மிகப்பெரிய சமூக ஊடக மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியவர் ஆவார். இவர் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
இவரது தொழில்நுட்ப பார்வையால் உலகில் பல மூளைகளில் பிரிந்து கிடக்கும் மக்களையும் நண்பர்களையும் உறவினர்களையும் ஒரே தளத்தில் இணைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இளம் வயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய மார்க் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தனது நண்பர்களுடன் இணைந்து “தி பேஸ்புக்” என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினார்.
 இந்த பேஸ்புக் தளம் மாணவர்களிடமும் பல்கலைக்கழகங்களிலும் பெரும் அளவில் பரவி பிறகு உலகம் முழுவதும் வெற்றியை நிலை நாட்டியது.
2004 ஆம் ஆண்டு மார்க் தனது படிப்பை நிறுத்திவிட்டு பேஸ்புக்கை முழு நேரமாக கவனிக்கத் தொடங்கினார்.
அவரது தலைமையின் கீழ் பேஸ்புக் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தது பிறகு இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் போன்ற பிரபலமான சமூக ஊடகத் தளங்களை இவரது பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது..
மார்க் ஜூக்கர்பெர்க் உலகின் மிகப் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக தற்போது வரை இருந்து வருகிறார். இவரது மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் பெரும் பகுதியை இவரே வைத்துள்ளார்.
இதன் காரணமாக அவரின் சொத்து மதிப்பு தற்போது 202.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட்

பெர்னார்ட் அர்னால்ட் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் ஆவார்.
இவர் உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்களின் நிறுவனமான லூயி விட்டான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
அது மட்டுமல்லாது பல முன்னணி  பிராண்டட் நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வாகித்து வருகிறார்.
இவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி பிரான்சின் ரூபே நகரில் பிறந்தார் பிரான்சின் முன்னணி பொறியியல் பள்ளியான எக்கோல் பாலிடெக்னிக்கில் கல்வி பயின்றார்.
1987 ஆம் ஆண்டு வாழ்நாள் அர்னால்டு அவர்கள் லூகி உட்டான் என்ற உலகின் மிகப்பெரிய லக்ஷரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கினார் அந்நிறுவனம் இன்று மிகப்பெரிய சொத்து மதிப்பாக உயர்ந்துள்ளது.
அர்னால்ட் அவர்கள் மிகப்பெரிய கலை பொருட்களை சேகரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். இவர் உலகின் மிகவும் பிரபலமான கலைஞர்களின் படைப்புகளை சேகரித்து வருகிறார்.
அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் விளையாட்டுப் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்பான்சர் களாக இருந்து வருகிறார்கள்.
பெர்னாட் அர்னால்டின் தற்போதைய சொத்து மதிப்பு 168.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

லாரி பேஜ்

Google நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் லாரி பேஜ் இவர் தனது நண்பர் சேர்ஜி பிரின் உடன் இணைந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இணையதளங்களில் புதிய கோணத்தை தேடுவதற்கான ஒரு முறையை உருவாக்கினார் இதுவே பின்னாளில் கூகுள் தேடு பொருளாக உருவெடுத்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
லாரி பேஜ் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் கூகுள் நிறுவனத்தின் பங்கு மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவரது சொத்து கணக்கிடப்படுகிறது.
லாரி பேஜின் தற்போதைய சொத்து மதிப்பு 156 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

சேர்ஜி பிரின்

சேர்ஜி பிரின் google தேடல் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவர் தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
இவரது புத்திசாலித்தனத்தால் இணைய உலகத்தை முற்றிலும் மாற்றி அமைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருபவர்.
லாரி பேஜ் உடன் இணைந்து பிரின் அவர்கள் கூகுள் என்ற புதிய வகை தேடல் இயந்திரத்தை உருவாக்கினார்.
இந்த மென்பொருள் பேஜ் ரேங்கிங் அல்காரிதம் இணையத்தில் உள்ள பில்லியன் கணக்கான தகவல்களில் இருந்து மிகவும் பொருத்தமான தகவல்களை உடனடியாக கண்டுபிடிக்க உதவியது
இது இணையதள பயன்பாட்டின் விதிகளை மாற்றி அமைத்து கூகுளை உலகின் மிகப்பெரிய தேடல் இயந்திரமாக மாற்றிககாட்டியது.
சேர்ஜி பிரின் தொழில்நுட்ப உலகின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறார். இவரது கண்டுபிடிப்புகளால் நாம் வாழ்க்கையை எளிதாக்கி இணையதளத்தை நம் விரல் நுனியில் கொண்டு வந்துள்ளார்.
 இவரின் சொத்து மதிப்பு 149 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட் உலகின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பெர்ஷயர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் இவர் எளிமையான வாழ்க்கையை வாழக்கூடிய புத்திசாலித்தனமான முதலீட்டாளர் ஆவார்.
வாரன் பஃபெட் சிறுவயதில் இருந்து பணம் சம்பாதிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.
குழந்தை பருவத்திலேயே செய்தித் தாள்கள் வினியோகம் செய்தும் கொக்கோகோலா போன்ற குளிர் பானங்களை வாங்கி விற்றும் பணம் சம்பாதித்துள்ளார்.
 சிறு வயதிலேயே பங்குச் சந்தையை பற்றி நன்கு படித்து ஆராய்ச்சியும் செய்து வந்துள்ளார்.
1965 ஆம் ஆண்டு வாரன் பஃபெட் “பெர்ஷயார் ஹாத்வே” என்ற துணி கம்பெனியை விலக்கி வாங்கினார். பின்னர் இந்த நிறுவனத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யும் பெரும் நிறுவனமாக வெற்றிகரமாக மாற்றிக் காட்டினார்.
 இந்த நிறுத்தின் மூலம் இன்று இன்சூரன்ஸ், ரயில்வே, உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்து தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளார்.
வாரன் பஃபெட் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் தனது வருமானத்தின் பெரும் பகுதியை தர்மா காரியங்களுக்காக செலவிட்டு வருகிறார் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 141.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி அந்த நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிற்வநங்களில் ஒன்றாக மாற்றிக்காட்டினார்.
மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்து, தொடக்க காலத்தில் இருந்தே மைக்ரோசாப்ட் நிறுவத்தில் பணியாற்றி வருகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவத்தில் பில் கேட்ஸ்க்கு பிறகு சி.இ.ஓவாக பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுத்தி வந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமல்லாது பல நிறுவனங்களில் செய்து வருகிறார்.
ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு 124.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ஜென்சன் ஹூவாங்

ஜென்சன் ஹூவாங் நவீன கம்ப்யூட்டர் உலகில் மிக முக்கிய நபராக விளங்கி வருகிறார். உலகின் மிகப்பெரிய கிராபிக்ஸ் சிப்புகள் தயாதயாரிக்கும் நிறுவனமான NVIDIA-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
NVIDIA நிறுவனம் கிராபிக்ஸ் சிப்புகள் தாயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.
ஜென்சன் ஹூவாங் தைவானில் பிறந்தவர் ஆவார், சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். பிறகு அமெரிக்கா சென்று அங்கே ஓரிகான் மாநில பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.
பிறகு AMD போன்ற சில நிறுவனங்களின் பனியாற்றிவிட்டு 1993-ஆம் ஆண்டு NVIDIA நிறுவனங்களை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு 117.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *