கால கணிதம் செய்ய மிகச்சிறந்த உபாயம் ஜோதிடம் மட்டுமே. வானத்தில் உள்ள க்ரஹங்கள் இறங்கி வந்து மனிதனை பாதிக்குமா எனக்கேட்டுவிட்டு தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் நபர்கள் கடந்து செல்லலாம்.
சித்திரை (மேஷம்)மாதம் சூரியன் உச்சம்
க்ரஹங்களைக் கொண்டு நேரத்தை அளக்கவும் கால கணிதம் செய்யவும் பயன்படுத்தும் ஜோதிஷ முறை இந்த பாரத தேசத்தின் தனித்துவமான ஒன்று. இருட்டில் நடக்கும் ஒருவனுக்கு ஒளி தருவதால் இதன் பெயர் ஜோதிஷம் என்றானது..
சித்திரை (மேஷம்)மாதம் சூரியன் உச்சம். ஆம் வெய்யில் கொளுத்தும்! ஐப்பசி (துலாம்)மாதம் சூரியன் நீச்சம். ஆம் மழைக்காலம். வைகாசி மாதம் சந்திரன் உச்சம் பூரண நிலவினை இடர்பாடின்றி நீங்கள் காணலாம். கார்த்திகை மாதம் சந்திரன் நீச்சம். நிலவொளி சரிவர கிடைக்காது. அதனால் தான் தீபமேற்றுகிறோம்.
சூரியனைக் கொண்டு தந்தை, சந்திரனைக் கொண்டு அன்னை, செவ்வாயைக் கொண்டு சகோதரன், என க்ரஹங்களை நிர்ணயம் செய்து,க்ரஹங்களின் சஞ்சார காலங்களைக் கொண்டு பலனறிதல் என்பது பெரும் மூளைக்கு வேலை தரும் விஷயம். நல்ல கல்வியும் அவசியம்..
2025 மார்ச் ஆங்கில மாதம் சனிப்பெயர்ச்சி ஏற்பட இருக்கிறது. சனி கும்பத்தில் ஆட்சி இடத்திலிருந்து மீனத்தில் குருவின் இடத்திற்கு சஞ்சாரம் செய்கிறது. பலனுரைக்க பல விஷயங்கள் இருந்தாலும்.. அம்பிகையின் அருள் கொண்டு மனத்தின் கண் அவளை நிறுத்தி காலத்தோடு ஒன்றி சிலவற்றை பகிர்கிறோம்..
சனி என்றவுடன் தீமை எனக்கருதுவோரே, சனி காலம் கர்ம நாசினி, ஒரு மனிதனில் வாழ்நாளை 120 வருடங்களாக நிர்ணயித்தால் அதில் ஒவ்வொரு 30 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரை சனி காலம் வந்தாக வேண்டும்..
சனியின் பெயர்ச்சிக்காலம் 2,1/2 வருடங்கள், நமது ராசியின் முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நம் ராசியில் இரண்டரை வருடம், நமக்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என மொத்தம் ஏழரை வருடங்களை பழக்கத்தில் நாம் ஏழரை வருடங்களாக அழைக்கிறோம்.
ராசி என்பது சந்திரன். வேதம்// சந்ரமா மனஸோ ஜாத: //என்கிறது, மனிதனுக்கு பிறப்பில் மனம் உருவாக சந்திரனே காரணம். நம்முடைய மனம் எனும் எந்திரமே ராசி எனக்கொள்ளலாம். உடலுக்கும் மனத்திற்கும் ராசி அல்லது சந்திரன் என பெயரிடலாம். எனவே இந்த ராசியின் 12, ராசி 1 ஆகிய இடங்களில் சனியின் சஞ்சாரம் நிகழும் காலம் நமது வாழ்வில் கர்ம நாசன நிகழ்வுகள் நிகழ்வதால் மனம் கடினத்தை உணரும்.
இந்த ஏழரை சனி காலத்தில் மீனம் மேஷம் ரிஷபம் கன்னி விருச்சிகம் ஆகிய ராசியினர் சந்திக்க இருக்கும் நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பகிர்கிறோம்.
கும்பம்-மீனம்-மேஷம்
நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு என பெரும்பாலும் ஏழரை சனி காலத்தில் தான் தன் ஜாதகத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள்.
சனிக்ரஹம் மனிதனின் ஆயுளுக்கு, தர்மத்திற்கு, பகலில் பிறந்தோர்க்கு மாதாவிற்கு, ஆளுமைக்கு, மக்கள் அதிகாரத்திற்கு, மக்களை ஆளும் தன்மைக்கு என பல்வேறு காரகம் கொண்ட க்ரஹம்.
முதல் சுற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று. (30 வயதிற்குள் முதல்ல சுற்று, 30 வயதுக்கு மேல் 60க்குள் இரண்டாம் சுற்று, 60 வயதுக்கு மேல் மூன்றாம் சுற்று)
சனி காலத்தில் ஒருவன் தன் உயிர் பிரியும் போது என்ன வலியை மனத்தால் உணர்வானோ அதே அளவு மனவலியை அனுபவிப்பர். (அவரவர் கர்மத்தை பொறுத்து)
முதல் சுற்றான 30 வயதுக்குள் இளமைப்பருவம் என்பதால் தன்னுடைய இணையால் துன்பப்படுபவர்களே பெரும்பாண்மை, ஆதலால் குறிப்பாக ஜென்ம சனி காலத்தில் விவாஹத்தை தவிர்க்க வேண்டும். காதல் முறிவு, திருமண முறிவு முதல் சுற்றில் இளைஞர்களை ரண வேதனையை அடைய வைக்கும். வயதாகி விட்டது வேறு வழி இல்லை எனில் இணையின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து பொருத்தம் பார்த்து விவாஹம் செய்யலாம்.
இரண்டாம் சுற்று இரண்டாவது 30 வருடம் என்பதால் பணத்தை இழப்பது, தொழில் முடக்கம், மருத்துவச் செலவு, பண நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளே அதிக பாதிப்பை தரும். எக்காரணம் கொண்டும் யாரையும் நம்பி கடனோ, ஜாமீன் கையெழுத்தோ, வட்டிக்கு வாங்குவதோ செய்து விட்டு அனைத்தையும் இழக்கும் நிலையை ஏற்பட வாய்ப்பு அதிகம் குறிப்பாக மருத்துவம். ஏழரை சனி காலத்தில் வியாதி ஏற்பட்டு அல்லல் படுவர்.
3 வது 30 வருடம், 60 வயதுக்கு மேல் இதில் உயிர் குறித்த கவலை ஆப்பரேஷன், உடல் உறுப்பு பாதிப்புகள் ஏற்பட்டு நிவர்த்திக்காக ஜாதகத்தை பார்ப்போர் அதிகம்.
இதில் மூன்று சாராருக்கும் பொதுவாக கால் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஏழரை சனி காலத்தில் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் கடுமையை அனுபவிப்பர். ஆனால் ஏழரை வருடங்கள் நிறையும் போது செட்டில் ஆகி இருப்பர். அரசியல் வாதிகள் பதவி பெறுவர், சுய தொழில் செய்வோர் தனக்குக்கீழே வேலையாட்களை பெறுவர், நிதானம் வந்துவிடும், பேரனுக்கோ பேத்திக்கோ ஏழரை சனி காலமெனில் தாத்தா பாட்டிக்கு அம்மா அப்பாவிற்கு சிறிய கண்ட காலம் தான்.
ஏழரை சனி நடக்கும் நபரின் தாய், மனையாள், கால் இடுப்பு வலியால் துன்பப்படுவர்.
இதில் மீன ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்க உள்ளது. இருப்பதிலேயே கடுமையை மீன ராசியினர் அனுபவிப்பர்.
நிற்க! என்ன நிவாரணம்?
எப்படி ஜிம்மிற்கு போகும் ஒருவர் உணவில் வழிமுறையை மேற்கொள்வரோ அதே போல ஏழரை சனி காலத்தில் வாழ்வை வரைமுறை படுத்தியாக வேண்டும்! தினசரி வழிபாடு நல்ல பலன் தரும், நாம ஜபங்கள் வல்லமை தரும்.
கொடுக்கல் வாங்கல், பெரிய ரிஸ்க், லாட்டரி அதிர்ஷ்ட்ம், பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசை, மடத்தனமாக இணையை தேர்ந்தெடுத்தல், உணவில் அலட்சியம் ஆகவே ஆகாது இவற்றை அறவே தவிர்க்கவே வேண்டும்.
உடற்பயிற்சி கட்டாயம் என்ற கொள்கை வேண்டும்.
இதை மட்டும் நீங்கள் கடை பிடித்தால் ஏழரை சனி காலம் வரமாக இருக்கும்.
கடகம்! இந்தப்பதிவை கவனமாக வாசியுங்கள்
இது விமோசனத்திற்கான காலம்.. வேதம் இப்படி சொல்கிறது ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதா பபூவ.. சனி க்ரஹம் மட்டுமே மக்களை ஆளும் திறனை தர வல்ல க்ரஹம்..
நட்பு,தொழில் தொடர்புகள்,குடும்ப உறவினர்கள்,பொது புத்தியில் நமது அந்தஸ்து ஆகியவை சனிக்ரஹத்தினால் ஏற்பட வல்லது..
அந்த சனி க்ரஹம் மாரக ஸ்தானத்தில் இருப்பதென்பது மேற்குறிப்பிட்ட அம்சங்களில் கட்டாயம் சிக்கலை ஏற்படுத்தும்! நான் ஆம் இந்த அஷ்ட்டம சனி காலமென்பது கடக ராசி நண்பர்களுக்கு மிக கடுமையான காலமாக இருந்திருக்கிறது!
வெகு மக்கள் பகை என்பது கட்டாயமாக இருந்தது அவர்களுக்கு! குரு பதினோராம் இடமான ரிஷபத்தில் இருப்பதால் லாபமும் கெட்டிருக்கும்! இந்த வருடம் குரு பன்னிரெண்டில் மறைந்தாலும் நாலாமிடத்தை பார்க்க இருப்பதால் கூடிய மட்டும் கடன்,வியாதி,நீசம் மறையும்!
க்ரஹ சேர்க்கைகளுக்கு பலன் சொல்வதென்பது சிக்கலானது தான்.. ஆனால் சனி மற்றும் குருவை கொண்டு சூழலை ஊகிக்க இயலும்..
கடக ராசி நண்பர்கள் இந்த வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.. இழந்த செல்வத்தை இந்த வருடம் சேர்க்கலாம்! காரியத்தடைகள் அகன்று சுபிக்ஷம் கிடைக்கும்! விரையம் குறையும்!
மாரகம் கெடும்! அஷ்டம சனி காலம் ஏழரை சனி காலத்தை விட துர்லபமானது! ஆயுர் காரக க்ரஹமான சனி எட்டில் சென்றால் தற்றொலை எண்ணங்கள் கூட ஏற்பட்டிருக்கும்!கடகம் சந்திரனின் ஆட்சி இடம் என்பதால் மனோ பலம் குன்றிப்போய் இருந்திருக்கும்.. கண்ணை சுற்றி கரு வளையம் தொன்றி இருக்கலாம்..
எது எப்படியோ விமோசன காலம் வந்துவிட்டது!! நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்று பலன் உரைப்பது ஜோதிடனுக்கு அழகல்ல! இனி வரும் காலத்தில் புத்தியோடு செயல்படும் பட்சத்தில் நிம்மதியை அடையலாம்.. இனிய ஆனாலும் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம்
சிம்ம ராசி அன்பர்கள் மேற்சொன்ன அத்தனை உபாதைகளையும் இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.
இறைவன் இந்த புத்தியை வழங்கி இருப்பதே வருமுன் காக்கத்தான்.. சிம்ம ராசியினர் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு வழிபாடுகளுக்கான திட்டங்களை வகுத்துவிடுங்கள்..காலை விளக்கேற்றி பத்து நிமிடம் ஒதுக்கிப்பாருங்கள்.. சந்ர பலம் அதிகரித்து ஜெயம் பெறலாம்..
வரும் பாங்குனி மாதம் முதல் கடக ராசி அன்பர்கள் நல்லவற்றை எதிர்பார்க்கலாம்.
முகூர்த்தம்
விவாஹப்பொருத்தம் பார்ப்பது அல்லது கணிப்பது எவ்வளவு சீரழிய முடியுமோ அத்தனை சீரழிந்து போய் உள்ளது சமூகத்தில்…
விவாகரத்து அல்லது மணம் முறிவு அதிகம் ஏற்பட இத்தகு விவாஹங்களும் ஒரு வகை காரணம்..
ஜோதிடம் என்ற உடனேயே விளம்பரம் அல்லது போர்டு வைத்த எவரோ ஒருவரிடம் சென்று ஜாதகத்தை நீட்டினால் நஷ்ட்டம் உங்களுக்கே..
ஒன்று இரண்டு என பொருத்த நம்பர்களில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு..
மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் ஜாதகங்களில் உள்ள க்ரஹ நிலைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. நடக்குத் தசை மிகுந்த கவனத்தோடு பார்க்கப்பட வேண்டும்.. தசா சந்தி இருந்தால் அந்த ஜாதகங்கள் இணைவதை தவிர்ப்பதே நன்மை..
நானே ஆன்லைனில் பார்த்துப்பேன் என்போரும் உண்டு… வெறும் நம்பர்களை வைத்து தவறு இழைக்கிறார்கள்..
ஏழரை சனியின் ஜென்ம சனி காலத்தில் கூடுமான வரை கல்யாணத்தை தவிர்ப்பதே சரி..
பொருத்தம் பார்ப்பதில் ஏகப்பட்ட கூறுகள் உண்டு! அத்தனையையும் ஆய்வு செய்து கல்யாணத்தை செய்வதே சரி..
அவசர அவசரமாக செய்ய வேண்டிய விஷயம் அல்ல கல்யாணம்..
என் குருநாதர் சொல்வார்.. விவாஹத்தை பொருத்த வரை…நெருப்பையும் பஞ்சையும் சேர்க்கனும்..நீரையும் நெருப்பையும் அல்ல .. என
இப்போது சிம்ம ராசி துலா ராசி தனுர் ராசிக்கு வியாழ நோக்கம் அதாவது குருப்பார்வை உள்ளது.. விவாஹத்திற்கான நல்ல காலம் இது..
Read Also ; 2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கார்கள்
சாந்தி முகூர்த்தம்:
கல்யாண தேதி வைக்க வருகிறவர்கள் ஞாயிற்றுக்கிழமை வேணும்னு அடம் பிடிப்பாங்க! கல்யாணத்தன்று இரவு சாந்தி முகூர்த்தம் குறிக்கனும்! பெண்ணுக்கு மாதவிடாய் நாள் எப்பன்னு கேட்டு குறிக்கனும்!
குழந்தை பிறப்பு என்ற மஹோன்னத நிலையை யோசிக்காமல் காம இச்சையை மட்டுமே கொண்டு பிறக்கும் குழந்தை ஒரு முழு ஜீவனாக இருப்பதில்லை!
குழந்தையை ஏற்படுத்த ஒரு ஆணும் பெண்ணும் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சாஸ்த்ரம் சொல்லும் கோட்பாடுகள்….
1,மாதவிடாய் காலமான முதல் நான் நாட்களை தவிர்த்துவிட வேண்டும்
2,சதுர்த்தி சஷ்டி அஷ்ட்டமி ஏகாதசி த்ரயோதசி சதுர்தசி அமாவாசை பௌர்ணமி புணரக்கூடாது
3,புதன் கிழமை வியாழன் சனி ஆகிய கிழமைகளில் கூடலாம்
4,ரோகிணி உத்தரம் ஹஸ்த்தம் சுவாதி அனுசம் மூலம் திவோணம் சதயம் ரேவதி நட்சத்திரங்களில் கூடுதல் உத்தமம்
5,ரிஷபம் மிதுனம் கடகம் கன்னி துலாம் தனுசு கும்பம் மீன லக்னங்களில் கூடுதல் நலம்
6, மாதவிடாய் நாட்களிலிருந்து ஒற்றைப்படை நாளில் கூடினால் பெண்ணும், இரட்டை படை நாட்களில் கூடினால் ஆணும் பிறக்க வாய்ப்பு அதிகம்
உயிர் உருவாக்கம் என்பதும் தாம்பத்யம் என்பதும் புனிதமானவை! அதற்கான வரைமுறைகளோடு வாழும்போது வரும் தலைமுறை வரமாகும்! இது போன்றதொரு கட்டுப்பாடும், வழிமுறையும் வேறு ஏதேனும் ஒரு மதத்தில் இருக்க வாய்ப்பில்லை…
ஞாயிறை ப்ரதானப்படுத்த வேண்டாமே!