காலண்டர் உதவி இல்லாமல் ஹோரை, யமகண்டம், குளிகை ராகு காலங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது என ஒரே பதிவாகப் பார்ப்போம்!
முதலில் ஹோரைகள் இன்று புழக்கத்தில் ஹோரை என்பது ஹோரா hour என்றே வழக்கில் உள்ளது. காலை சூரியன் உதிக்கும் போது முதலில் வரும் ஒரு மணி நேரம் அந்த நாளுடைய கோளுக்கான நேரம். ஞாயிறு எனில் சூரியல், திங்கள் – சந்திரன், செவ்வாய் – செவ்வாய், புதன் – புதன், வியாழன் – குரு, வெள்ளி – சுக்ரன், சனி – சனி என ஒரு நாளுக்கான க்ரஹங்கள் இவை.
ஞாயிறு அன்று ஹோரைகளை கணக்கிடும் போது ஒரு நாளுக்கான முதல் ஒரு ஹோரை அந்த நாளுக்கான சூரிய ஹோரை காலை 6-7 சூரியன், 7-8 என்ன ஹோரை? இரண்டாவது ஹோரையை கண்டுபிடிக்க ஞாயிறின் முந்தா நாளை எடுக்க வேண்டும், ஞாயிறின் முந்தாநாள் வெள்ளி அல்லவா அப்படியானால் 7-8 சுக்ர ஹோரை. சரி 8-9 ?. வெள்ளிக்கு முந்தாநாள் புதன். என சுலபமாக ஹோரைகளை நீங்கள் கண்டு பிடிக்கலாம். மதியம் 1 மணிக்கு பின்பாக திரும்ப சூரியனில் இருந்தே ஆரம்பமாகும்..
யம கண்டம்
யம கண்டகம் என்பது குருவின் காலம்! கேதுவின் காலமென பலர் சமூக ஊடகங்களில் கூறி வருவது பொய்.
இதை அறிய 1:30 மணி நேரத்தை ஒரு கோளுக்கான முகூர்த்தம் என புரிந்து கொள்ள வேண்டும், புதன் கிழமை அன்று காலை சூரிய உதயம் முதல் 1:30 மணி நேரம் புத மூகூர்த்தம் 07:30 வரை. புதனுக்கு அடுத்த நாள் வியாழன். வியாழன் என்பது குரு எனவே 07:30 – 09:00 யம கண்டக காலம். செவ்வாய் அன்று முதல் 01:30 மணி செவ்வாய்க்கும், அடுத்த 01:30 மணி நேரம் புதனுக்கும், அடுத்த 01:30 மணி நேரத்தில் குரு காலம் ஏற்படும்! எனவே செவ்வாய் அன்று 09 முதல் 10:30 க்குள் யம கண்டக காலம்
குளிகை: யம கண்டகத்தை எப்படி குருவை வைத்து கணித்தோமோ அதே போல குளிகையை சனியை கொண்டு கணிக்க வேண்டும்! வெள்ளி அன்று முதல் முகூர்த்தமான 01:30 மணி நேரம் சுக்ர முகூர்த்தம் 07:30 வரை.. வெள்ளிக்கு அடுத்த முகூர்த்தமான 07:30 – 09:00 சனியின் முகூர்த்தம் குளிகை.. சனியின் காலம் குளிகை அவ்வளவே.
எம கண்டம், குளிகை
ஒரு நாளின் ஆரம்ப முகூர்த்தம், சூரியன் உதித்து அதாவது காலை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும், அந்த நாளின் கடைசி முகூர்த்தம் அதாவது சூரியன் மறையும் கடைசி ஒன்றரை மணி நேரமும், அந்த நாளுக்கான க்ரஹத்தின் நேரம்
சனிக்கிழமை எனில் காலை முதல் ஒன்றரை மணி நேரமும் மாலை சூரியன் மறையும் கடைசி ஒன்றரை மணி நேரமும் சனிக்கான நேரம்,
ஒவ்வொரு கிழமையின் முதல் நேரம் முடிந்தபின், அடுத்ததாக அடுத்த கிழமையின் க்ரஹத்தின் நேரம் வரும்! முறையே ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி (சுக்ரன்) சனி என.
இதில் குருவின் நேரம் எதுவெல்லாமோ அதுவெல்லாம் எம கண்டகம், சனியின் நேரம் எதுவெல்லாமோ அது குளிகை!
எடுத்துக்காட்டாக வியாழக்கிழமை காலை முதல் முகூர்த்தம் குருவின் காலம் எனவே வியாழன் அன்று காலை 06:00 முதல் 07:30 வரைக்கான காலம் எம கண்ட காலம், அதன் பின் வரக்கூடிய அடுத்த முகூர்த்தம் 07:30 முதல் 09:00 வரை சுக்ரனின் காலம், அடுத்து வரக் கூடிய 09:00 முதல் 10:30 வரை சனியின் காலம் எனவே அதை குளிகை என்பர்…
இந்த கணக்கீடு எல்லா நாளுக்கும் பொருந்தும், இதில் காலண்டரிலோ பஞ்சாக்கத்திலோ ஒரு க்ரஹத்தின் இரண்டாவது காலம் குறிப்பிடப் படுவதில்லை, வியாழக் கிழமை மாலை 04:30 முதல் 06:00 மணி வரையும் எம கண்டக காலமே ஆனால் எங்கும் குறிப்பிடும் வழக்கம் இல்லை…
இனி எம கண்டத்தையும் குளிகையையும் எந்த புத்தகத்தின் கேலண்டரின் உதவி இல்லாமலே நீங்கள் அறியலாம்
ராகு காலம்
ராகு காலம்; ஹோரை, யம கண்டகம், போல அல்லாமல் ராகு காலம் வித்யாசமானது! ஏனெனில் ராகு காலம் நிலவு சூரியன் செவ்வாய் இவற்றை மையப்படுத்தி வரும்! சாயை அல்லவா? ராகு கேதுவிற்கும் சூர்ய சந்ர செவ்வாய் நிர்ணயம் உண்டு இதனை நினைவில் வைக்க.. யம கண்டம் குளிகை போலவே 01 : 30 மணி நேரம் என்ற அடிப்படையை எடுத்தால் கீழ்கண்டவாறு கணிக்கலாம்..
ஞாயிறு சூரிய முகூர்த்த காலத்தில் ராகு காலம்..
திங்கள் செவ்வாய் காலத்தில் ராகு காலம்..
செவ்வாய் சூரிய காலத்தில் ராகு காலம்..
புதன் கிழமை சூரியன் காலத்தில் ராகு காலம்.
வியாழன் அன்றுசெவ்வாய் காலத்தில் ராகு காலம்.
வெள்ளி அன்று சந்திரன் காலத்தில் ராகு காலம்.
சனி அன்று சந்திரன் காலத்தில் ராகு காலம்.
பின் குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்தும் சூரிய உதயத்தில் இருந்தே கணக்கிடப்பட வேண்டும். மேலும் ராகு காலமோ யம கண்டமோ குளிகையோ ஹோரைகளோ முழுமையான கெட்ட நேரமென்று ஏதுவும் இல்லை. எம கண்டக காலத்தில் ஞான முக்தி சார்ந்த செயல்களுக்கானதாகவும், குளிகையில் தர்ம பரிபாலனம், ஸ்த்திர விஷயங்களுக்காகவும் ( போர் போடுதல், சேமிப்பு ), ராகு காலத்தில் அம்பிகை ஆராதனைக்கும் பயன்படுத்தலாம்.
பஞ்சாங்கத்திலும் காலண்டர்களிலும் ராகு காலம் என்ற ஒரு நேரம் இருக்கிறது, மக்களிடையேயும் ஜோதிடர்களிடையேயும் ராகு காலத்தில் நல்ல நிகழ்வுகளை செய்ய வேண்டாம் என்ற வழக்கம் இயல்பாக இருக்கிறது.
சரி இந்த ராகு காலம் எதன் அடிப்படையில் முதலில் இயங்குகிறது என்பதை அறிய வேண்டும். அதை அறிந்தால் தான் நம்மால் ராகு காலம் பற்றிய புரிதலுக்கு வர இயலும். இதை அறிய யம கண்டம் மற்றும் குளிகை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் ! ஒரு நாள் அதன் கிழமைகளின் க்ரஹம் எதுவோ அந்த க்ரஹத்தின் காலமே முதல் முகூர்த்த காலம் கணக்கிடப்பட வேண்டும்!
அந்த வகையில் எது குருவின் காலமோ அது யம கண்டகம். எது சனியின் காலமோ அது குளிகை. அப்படி ராகு காலத்தின் அளவீடு என்பது ராகு என்ற காலம் மட்டுமல்ல கேது என்ற காலத்தையும் சேர்த்தே ராகு காலம் என நாம் குறிக்கறோம்.
சூரியன் சந்திரன் செவ்வாய் ஆகிய மூன்று க்ரஹங்களும் ராகு காலத்தின் காலங்களாக வருகின்றன.
சூர்ய சந்திர செவ்வாயின் ச்சாயை ராகு கேது என யூகிக்க முடிகிறது. வேதம் சோமனை ராகு கேது பவித்ரம் மற்றும் சுத்தி செய்வதாய் சொல்கிறது.
Read Also ; 2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கார்கள்
ஒரு மண்டலம் என்பதை எப்படி கணக்கிடுவது?
மூன்று பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு மண்டலம்! பௌர்ணமி தொடங்கி அமாவசை வரை வரும் பதினைந்து தினங்கள் சேர்ந்தது ஒரு பட்சம், மூன்று பட்சங்கள் சேர்ந்தது ஒரு மண்டலம்!
பெரும்பாலும் விரத விழா நாட்கள் பௌர்ணமியை மையப் படுத்தியே நிகழும்! நீங்கள் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் விழாக்களை கீழே காணுங்கள்…
தைப்பூசம் – பௌர்ணமி
மாசி மகம் – பௌர்ணமி
பங்குனி உத்தரம் – பௌர்ணமி
சித்திரா பௌர்ணமி – பௌர்ணமி
வைகாசி விசாகம் – பௌர்ணமி
ஆனி அனுஷம் (மூலம் – பௌர்ணமி
ஆடி பூராடம் – பௌர்ணமி
என நமது விழாக் காலமோ விரதமோ பௌர்ணமியை சங்கமித்தே வருவது மரபு!
சில ஏக தின வ்ரதங்கள் உண்டு ! சில நக்ஷத்ர சம்மந்தமான வ்ரதங்களும் திதி சம்மந்தமான வ்ரதங்களும் உண்டு ! இங்கே அடியேன் குறிப்பிட விரும்புவது, மூன்று பக்ஷங்கள் சேர்ந்த 45 தினங்களே மண்டலமாக இருக்க இயலும் 48 அல்ல.
ஹோமங்களும் அதன் பலன்களும்
இந்த ஹோமத்தை செய்தால் இந்த பலன் என ஒரு பெரும் பட்டியலே கண் முண்ணே காணக் கிடைக்கிறது, அவ்வாறான ஹோமங்களை செய்து கொண்டு புண்யத்திற்காக முயல்வோர் சிறிய பகுதியினர் தான்!
ஒரு ஹோமத்தை செய்து கொள்தல் அவ்வளவு எளிதானதா?
முதலில் ஒரு ஹோமத்தை செய்வதற்கான நாள் நிர்ணயம் ரொம்ப அவசியமானது, அதன் பின்னர் நன்கு கற்றுத் தேர்ந்த அந்தணர்களை நியமனம் செய்வது அதை விட முக்யமானது, பெரும்பாலும் ஹோமங்களில் வேத மந்த்ரங்களை பயன்படுத்துதல் உத்தமம்!
தூய்மையான பொருட்களை பயன்படுத்தி செய்து கொள்ளல் வேண்டும், கலசத்தில் வைக்கும் மாவிலை தளிராக இருத்தல் அவசியம், முற்றிய மாவிலை விலக்கத்தக்கது, தேங்காய் குடுமியோடு இருத்தல் அவசியம், கலசம் நூல் சுற்றி இருத்தல் வேண்டும், எப்படி சுத்த வேண்டும் என்று ஸ்லோகங்களே உண்டு, நீர் பிடிப்பதற்கு முன் கலசம் சுத்தி செய்யப்பட வேண்டும் மந்திரத்தால்,
ஏற்கனவே ஒரு தேவதா ப்ரதிஷ்ட்டைக்கு பயன் படுத்திய குடத்தை திரும்ப பயன்படுத்த உள்புறம் நெய் பூசி சுத்தி செய்யும் வழக்கம் உண்டு, தூபம் போட்டு குடத்தின் உற்புறம் சுகந்தம் செய்து, நீர் சார்ந்த வேத மந்த்ரங்களைச் சொல்லி நீர் பிடித்து , கூர்ச்சம் இட்டு , உத்தம வாசனாதி த்ரவ்யங்கள் இட்டு , குடுமித்தேங்காய் வைத்து , சத்தனம் சாற்றி , குங்குமம் இட்டு, வஸ்த்ரம் சாற்றி மாலைகள் இட்டு, கலசத்தை தயார் செய்ய வேண்டும், ஒவ்வொன்றிர்க்குமே மந்த்ரங்கள் உண்டு! காரிகைகள் உண்டு,
நெல் பரப்பி, பச்சரிசி இட்டு, நெற் பொறி இட்டு, எள் இட்டு, அதன் மீது கலசத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும், பின்னர் தான் கலச ஆராதனை செய்ய வேண்டும், இப்படி ஏகப்பட்ட நியமங்கள் உண்டு,
மேலும் ஒரு எந்த மந்த்ரத்தை ஹோமஞ் செய்ய இருக்கிறோமோ அந்த மந்திரத்தை பத்து மடங்கு ஜபம் செய்திருத்தல் வேண்டும்! எடுத்துக்காட்டாக ஓம் கம் கணபதயே நம: என்ற மந்த்ரத்தை ஹோமஞ் செய்ய வேண்டுமெனில் அந்த மந்த மந்திரத்தை ஆயிரம் முறை ஜபம் செய்தால் தான் நூறு முறை ஹோமஞ் செய்ய முடியும், அதன் பின் பத்து முறை தர்ப்பிக்கவும் வேண்டும், 1000/ 100/ 10
தசாம்சம்!
வேத விற்பன்னர்களைக் கொண்டு எந்த பலன்களுக்கு எந்த மந்த்ரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வு செய்தல் அவஸ்யம், மிக முக்யமாக அந்த ஹோமஞ் செய்து கொள்ளும் நபர் அதன் மேன்மையை அறிந்திருத்தல் வேண்டும், அவன் சிரத்தை இல்லாமல் போனால் கஷ்ட்டம்!
ஹோமங்களை செய்து கொண்டிருக்கும் போது, வாயில் கை வைத்தல், கன்னத்தில் கை வைத்தல், தலை சொறிதல், கொட்டாவியாய் விட்டுத் தள்ளுதல், இவை எல்லாம் ஹோமங்களின் போது இவை எல்லாம் செய்யக் கூடாதவை.
இருளில் நடப்பவருக்கு வெளிச்சம் கொடுப்பதே ஜாதகம் ஆகும், கால கணிதம் செய்ய மிகச்சிறந்த உபாயம் ஜோதிடம் மட்டுமே. வானத்தில் உள்ள க்ரஹங்கள் இறங்கி வந்து மனிதனை பாதிக்குமா எனக்கேட்டுவிட்டு தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் நபர்கள் கடந்து செல்லலாம்