பினராயி விஜயன் தலைமையில் மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் இருந்து . கடந்த சில வருடங்களாக தமிழக எல்லை மாவட்ட பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழுவுகள் என பல்வேறு கழிவுகள் குப்பைகளை கொண்டு வந்து விவசாய இடங்கள் , அரசு நிலங்கள், நீர் நிலைகளில் கொட்டிவிட்டு இரவோடு இரவாக சென்றுவிடுகிறார்கள்.
அரசு அதிகாரிகளின் அலட்சியமா?
இதனால் பொது மக்களும் குழந்தைகளும் சுவாசிக்க முடியாத அளவிற்க்கு துர் நாற்றமும் ஏற்படுகிறது , அந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த முடியாத சூழ்நிலையும் உருவாகி வருகிறது,
அதே போல ஹோட்டல் கழிவுகளை கால்நடைகள் உண்ணும் போது அதனோடு சேர்ந்து பாலித்தீன் கவர்களையும் சாப்பிட்டு விடுகிறது இதனால் கால்நடைகள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் குப்பைகளை கொண்டு வந்து தமிழக எல்லைக்குள் கொட்டும் போது பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கையும் களவுமாக குப்பை லாரிகளை பிடித்த செய்திகளை அடிக்கடி நாம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது..
ஆனால் தமிழக எல்லையோர செக்போஸ்ட்களில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளோ, அல்லது போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகளோ அவர்களை பிடித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.
தமிழக அரசு அதிகாரிகள் இதற்க்கு துணையா?
சாதாரணமாக ஒரு கேரிபேக்கில் அரை கிலோ மீன் வாங்கி சென்றாலே பக்கத்தில் இருப்பவருக்கு நாற்றம் எடுக்கும் போது, அவ்வளவு பெரிய லாரிகளில் மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகளை பெரிய லாரிகளில் எல்லையை கடந்து கொண்டு வரும் போது பெரிய அளவில் துறு நாற்றம் வீசி இருக்கும் அல்லவா ஏன் அவர்கள் கண்டு கொளவதில்லை
இதனை பற்றி அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரிக்கும் போது “முன்னாடி எல்லாம் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கழிவுகளை கொட்டி விட்டு செல்வார்கள் இப்போதெல்லாம் அவர்களுக்கு துளி கூட பயம் என்பதே இல்லாமல் பகலிலே அதுவும் தனியாருக்கு சொந்தமான விவசாய இடங்கள், நீர் நிலைகள், வாய்க்கால்களில் கொட்டிவிட்டு செற்றுவிடுகிறார்கள்” இது சம்பந்தமாக பலமுறை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.
கேரளாவில் இருந்து “இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றிவரும் லாரிகள் ஒரு முறை சாலையை கடந்து சென்றாலே சாலையின் அருகில் வசிக்கும் எங்களுக்கு லாரி கடந்து சென்ற பிறகு கூட ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக துர் நாற்றம் குடலை பிடிக்கும், அப்படி இருக்கையில் எப்படி இந்த அதிகாரிகளுக்கு தெரியாமல் செக்போஸ்ட்டை இந்த லாரிகள் கடக்க முடியும்?
தமிழக அதிகாரிகளின் துணை இல்லாமல் அவர்கள் எப்படி தைரியமாக பகலிலே குப்பைகளை கொட்டிச்செல்வார்கள்? யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த அதிகாரிகள் ஏன் இந்த தமிழக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
Read Also ; புகார் அளித்தவர்களின் வேதனை
முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் பயனில்லை
இதே போல் சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் க்ரெடன்ஸ் தனியார் மருத்துவமனையில் இருந்து, தமிழகத்தின் எல்லையோர திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர்.
இதனை பார்த்த நிலத்தின் கண்காணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு சுத்தமல்லி காவல்துறையிலும், ஜனவரி 2ஆம் தேதி முதலமைச்சரின் சிறப்புப் பிரிவிலும் புகார் அளித்துள்ளார் அந்த புகார்கள் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தால் அவர்கள் 15 நாட்களுக்கு பிறகு தான் எங்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உங்க புகாரை அனுப்பி இருக்கோம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார்கள் ஆனால் அதன் பிறகு தான் அதிகமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கிறார்கள் என்று வேதனையோடு சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
Read Also ; நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு
தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்
தன் கட்சியில் சுற்றுச்சூழல் அணி என்ற ஒரு பிரிவை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலின் , டன் கணக்கில் கனிம வளங்களை கேரளாவிற்க்கு கொண்டு செல்வதில் எந்த தடையும் இல்லாமல் கண்ணும் கருத்துமாக செல்படுவதை போல, தன்னோட இண்டி கூட்டணி கட்சி ஆளும் கேரளாவில் அதன் முதல்வர் பினராயி விஜயனிடம் விசயத்தை சொல்லி நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை..??
வழக்கம் போல் முல்லை பெரியாறு விசயத்தில் வாய்மூடி இருப்பதை போல இதிலும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை தொடங்கி விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா முதல்வர் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த பிரச்சினைகளை முன் நின்று தீர்க்க கூடியவர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தான், அவர்களோ தற்போது கும்பகர்ண தூக்கத்தில்.
தன் (கேரளா) வீட்டு குப்பையை அடுத்தவன் வீட்டில் கொட்டிவிட்டு, நாங்கள் தான் கல்வி அறிவில் இந்தியாவில் முதன்மையான மாநிலம் என்று மார்தட்டிக்கொள்வது எந்த வகையில் நியாயம்..??
தவறு எங்கே நடக்கிறது?
கேரள மாநிலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது இதனால் அங்கே சட்ட திட்டங்களும் மிக கடுமையாக இருக்கிறது.
தமிழ்நாட்டைப் போல கேரளாவில் கண்ட இடத்தில் எல்லாம் குப்பைகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், ஹோட்டல் கழிவுகளை நினைத்த இடத்தில் கொட்டி விட முடியாது அப்படி கொட்டி விட்டால் கேரளாவில் அபராத தொகை மிக அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் அங்கே காவல் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் உள்ள அதிகாரிகள் யாரும் கையூட்டு வாங்குவதில்லை, அதன் காரணமாக அங்கே குப்பைகளை கொட்டாமல் தமிழகத்தில் எல்லையோர செக் போஸ்ட்களில் ஒரு சில அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து சுலபமாக தமிழக எல்லைக்குள் இவர்களால் அடிக்கடி வந்து கொட்டி விட முடிகிறது.
பிரச்சனையை தீர்ப்பது எப்படி
தமிழ்நாடு அரசாங்கம் தமிழக எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் மிக நேர்மையான காவல்துறை அதிகாரிகளையும் சுற்றுச் சூழல் துறையின் அதிகாரிகளையும் மற்றும் மாசுக்கட்டு வாரிய அதிகாரிகளையும் அங்கே பணிகள் அமர்த்த வேண்டும் அதே நேரத்தில் எல்லையோர பகுதிகளை மிகத் தீவிரமாக கண்காணிக்கவும் வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேரளா முதல்வரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை காண வேண்டும்.
குப்பைகளால் சுகாதாரத்தை பாதிக்கும் தீமைகள்
நகரங்களில் மற்றும் கிராமங்களில் மருத்துவ கழிவு, இறைச்சி கழிவு, ஹோட்டல் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது, சுற்றுச்சூழல், சமூக ஆரோக்கியம், நீர் ஆதரங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் தீமைகள் அதிகம்
மருத்துவமனை கழிவுகளில் இருந்து வரும் pathogens கிருமிகள், ஆபத்தான ரசாயனங்கள் இரத்தம் சம்பந்தமான நோய்கள் மற்றும் தொற்று நோய்களை பரப்புகிறது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஹெபடிடிஸ், ஹைவி, மற்றும் குடல்நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அதிக அளவில் சிதைவு அடைந்த இறைச்சி கழிவுகள் மூலம் நோய்களை பரப்பும் ஈக்கள் மற்றும் பூச்சிகளை அதிகமாக உருவாக்குகிறது.இதனால் காய்ச்சல், காலரா, மற்றும் தீவிர குடல்நோய்கள் வயிற்றுப் போக்குகளை உருவாகிறது
உணவகங்களில் இருந்து வெளிவரும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திறந்தவெளியில் கொட்டப்படும்போது பாதுகாப்பற்ற வாயுக்கள் வெளியிடுகின்றன, குப்பையில் உருவாகும் கரிம வாயுக்கள், குறிப்பாக மீத்தேன் காற்று மாசை உருவாக்குகிறது.
கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதால் நீர்பாசன கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் கலந்து, குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்துகிறது. குப்பைகளில் இருந்து வெளிவரும் லீச்சேட் (leachate) என்னும் திரவம் நிலத்தடி நீரை அதிகமாக பாதிக்கிறது.
அழுகிய நிலையில் சிதைவடைந்த கழிவுகள் Anaerobic processes முறையில் மீத்தேன் வாயுவை வெயியேற்றுகின்றன, இது பூமியின் தட்ப வெட்ப நிலையில் மாற்றத்தை அதிகரிக்கிறது. சுகாதாரத்துக்கு தீங்களான நச்சு வாயுக்கள் வெளிவருவதால் தும்மல், இருமல் போன்ற சுவாச நோய்கள் ஏற்படும்.
மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகளில் உள்ள ஆபத்தான ரசாயனங்கள் மண்ணின் மேற்பரப்பிற்க்கும் மற்றும் விவசாய பயிர்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
இந்தய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 1998 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 2016-ல் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, 2018-ல் மேலும் திருத்தப்பட்டது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (1986) சட்டத்தின் தண்டனைகள்
சுற்றுப்புற சூழல் விதிகளை மீறுவோர் ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்
தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடந்தால், ஒவ்வொரு நாளும் ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.
நகராட்சிகளின் தெருக்களில் அல்லது பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மின் சாதன கழிவுகளை தவறாக நிர்வகித்தால், தகுந்த நஷ்ட்ட ஈடு கோரப்படும்.
பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கான தண்டனைகள்
2022-ல் இருந்து யூசன் த்ரோ பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டது
இதனை மீறுவோருக்கு பலகோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
2018-ல் திருத்தப்பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
மருத்துவ கழிவுகள, மஞ்சள் (Yellow), சிகப்பு (Red), நீலம் (Blue), மற்றும் கருப்பு (Black) என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்.
அனைத்து மருத்துவ கழிவுகளும், அவை உருவாகும் இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
காற்று மாசு மற்றும் தொற்றுகளை தவிர்க்க உரிய இடங்களில் பத்திரமாக சேகரிக்க வேண்டும்.
Autoclaving, Incineration, Sterilization போன்ற முறைகளின் மூலம், கழிவுகளை சுத்திகரிக்கவும் அகற்றவும் வேண்டும்.
மருத்துவ நிறுவனங்கள், தங்களின் கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (SPCB) வருடாந்திர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
கழிவுகளைச் சுத்திகரிக்க பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகளை உரிய அனுமதி இல்லாமல் பொது இடங்கள், நீர் நிலைகள், மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். முறைப்படி சட்டம் நிரூபிக்கப்பட்டால் அந்த மருத்துவமனை மூடப்படும்.
கழிவுகள் மேலாண்மை விதிகள் மற்றும் தண்டனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான முக்கியமான சட்ட நடவடிக்கைகள் ஆகும். இவை முறையாக செயல்படுத்தப்பட்டால், மாசு குறைவதுடன், நிலையான வளர்ச்சி அடைவதற்கும் வழிவகுக்கும்.
அனைவரும் இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நாம் அனைவரும் எடுக்க வேண்டும். சுகாதாரமான மற்றும் சுத்தமான இந்தியா என்ற இலக்கை அடைய முடியும்.