இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் கில்

குரூப்புல டூப் வீரரை டீமை விட்டு அனுப்புங்க.. டீமை கெடுப்பதே அவர்தான்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து மூத்த வீரர்களை ஓரங்கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், இதற்கு இடையே “குரூப்ல டூப்பு வீரர்” ஒருவர் இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வீரர் சுப்மன் கில்.

குரூப்புல டூப்

சுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 59 இன்னிங்ஸ்களில் 1893 ரன்களை எடுத்து இருக்கிறார். இதில் இந்தியாவில் மட்டுமே அவர் 1177 ரன்களை எடுத்து இருக்கிறார். மற்ற நாடுகளில் மிக சொற்ப ரன்களை எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி இந்தியாவில் 42 என்பதாக உள்ளது.

அதற்கு அடுத்து அதிகபட்சமாக வங்கதேசத்தில் அவரது பேட்டிங் சராசரி 39.25 என்பதாக உள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் அது 35 அல்லது அதற்கும் கீழே உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் 14.66 பேட்டிங் சராசரியையும், தென்னாப்பிரிக்காவில் 18.50 என்ற பேட்டிங் சராசரியையும் வைத்து இருக்கிறார் சுப்மன் கில்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அஜின்க்யா ரஹானே வெளிநாடுகளில் ரன் குவித்த போதும் இந்தியாவில் அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய போதும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படி மூத்த வீரர்கள் அனைத்து நாடுகளிலும் சரியாக செயல்படவில்லை என்ற காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்ட போதும் சுப்மன் கில்லுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை எனவும், அவர்களை தேர்வு குழு நீக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், சுப்மன் கில்லும் தான் மோசமாக செயல்படுகிறார். அவருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது? கோலி, ரோஹித்தை அனுப்பும் முன் கில்லையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக அறியப்பட்ட புஜாராவுக்கு பதிலாகத்தான் சுப்மன் கில் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார்.

இதுவரை 32 போட்டிகளில் ஆடி இருக்கும் சுப்மனின் பேட்டிங் சராசரி 35 மட்டுமே, இவர் எப்படி புஜாராவுக்கு சிறந்த மாற்று வீரராக இருக்க முடியும்? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Read Also ; மணல் மாபியாக்களால் உயிருக்கு ஆபத்து காவலர் கடிதம்

சுப்மன் கில் வேஸ்ட் ஸ்ரீகாந்த் காட்டம்

சுப்மன் கில் வேஸ்ட்.. இந்திய பிட்சில் யார் வேண்டுமானாலும் ரன்கள் அடிக்கலாம்.. கொந்தளித்த ஸ்ரீகாந்த்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லுக்கு அளவிற்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கப்படுவதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இந்திய மைதானங்களில் யார் வேண்டுமானாலும் ரன்களை குவிக்கலாம் என்று கூறியுள்ள அவர், வெளிநாடுகளில் சுப்மன் கில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்ததால் 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்து இந்திய அணி பரிதாபமான நிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் ஆடிய விதம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஏனென்றால் கடந்த 3 ஆண்டுகளில் சுப்மன் கில் வெளிநாடுகளில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை சுப்மன் கில் சேர்க்கவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் பேசுகையில், சுப்மன் கில் ஒரு ஓவர் ரேட்டட் கிரிக்கெட் வீரர். அவரால் வெளிநாடுகளில் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இவருக்கு பதிலாக இஷான் கிஷன் இருந்திருந்தால் கூட ஏதாவது ஒரு இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை பதிவு செய்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் கேப்டன்சியை செய்தவர்கள். ஆனாலும் மீண்டும் பொறுப்பு கேப்டன்சி விராட் கோலியிடம் தான் அளிக்கப்பட்டது.

இதற்கு பின் இருக்கும் காரணமே புரியவில்லை. இந்திய மண்ணில் எந்த கிரிக்கெட் வேண்டுமானாலும் ரன்களை குவிக்க முடியும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் ரன்கள் குவிக்கிறார்களா என்பதே முக்கியம். 10 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தால் எந்த வீரர் வேண்டுமானாலும் ஒரு போட்டியில் நிச்சயம் ரன்களை அடிப்பார்கள். அதனை தான் சுப்மன் கில் செய்து வருகிறார்.

அவருக்கு அளவிற்கு அதிகமாக வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கி வருகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று 3 வடிவங்களில் வெவ்வேறானவை. அதற்கேற்ப இந்திய அணியை கட்டமைக்க வேண்டும். பும்ராவுக்கு நிகரான மாற்று பவுலரை இந்திய அணி தயார் செய்ய வேண்டும். ருதுராஜ், சாய் சுதர்சன் போன்ற டாப் ஆர்டர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கில் ஒரு ஸ்கேமார்

ஸ்கேம்மர்.. 95 ரன்கள்.. 32 டெஸ்டில் உருட்டிய சுப்மன் கில்.. 19 டெஸ்டிலேயே முடித்துவிட்ட ஜெய்ஸ்வால்!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 32 டெஸ்ட் போட்டிகளில் குவித்த ரன்களை, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 19 டெஸ்ட் போட்டிகளிலேயே குவித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை அளித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் சுப்மன் கில் மிகப்பெரிய ஸ்கேம்மர் என்று விளாசி தள்ளி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணி வீரர்களின் திறமையை மீண்டும் பரிசோதிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. அதேபோல் நீண்ட நாட்களாக ஃபார்மின்றி இந்திய அணியில் நீடித்து வந்த வீரர்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீதான வெளிச்சம் காரணமாக பல வீரர்கள் தொடர்ச்சியாக தப்பி வந்தனர். அதில் முக்கியமான வீரர் சுப்மன் கில். ஏனென்றால் வெளிநாடுகளில் சுப்மன் கில்லின் பேட்டிங் மோசமாகவே இருந்துள்ளது. கடைசியாக 2021 காபா டெஸ்டில் தான் சுப்மன் கில் அரைசதம் அடித்திருக்கிறார்.

அதுதான் அவரின் அறிமுக டெஸ்ட் தொடராகும். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மோசமாக ஆடிய சுப்மன் கில், சொந்த மண்ணில் மட்டும் சிறந்த ஆட்டத்தை விளையாடி வந்தார். தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபியில் 5 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய சுப்மன் கில் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.

அதாவது மிட்சல் ஸ்டார்க், சாம் கான்ஸ்டஸ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரை விடவும் சுப்மன் கில் மோசமான பேட்டிங்கை ஆடி இருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்களிடையே முக்கியமான ஸ்டாட்ஸ் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், இதுவரை 5 சதங்கள், 7 அரைசதங்கள் உட்பட 1,893 ரன்களை விளாசி இருக்கிறார்.

மறுபுறம் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 10 அரைசதங்கள் உட்பட 1,798 ரன்களை விளாசி இருக்கிறார். அதாவது சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 95 ரன்கள் மட்டும் தான். ஆனால் ஜெய்ஸ்வாலை விடவும் 13 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் கூடுதலாக விளையாடி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணிலும் தன்னால் ரன்களை குவிக்க முடியும் என்பதையும் ஜெய்ஸ்வால் நிரூபித்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசியாவுக்கு வெளியில் சுப்மன் கில் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் ரியல் ஸ்கேம்மர் சுப்மன் கில் தான் என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ஏனென்றால் ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் ஆடிய ஆட்டம் அவர் மீதான விமர்சனத்தை குறைத்திருக்கிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளிலும் கூட இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் மட்டுமே சுப்மன் கில் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் வழக்கம் போல் நடையை கட்டி இருக்கிறார். இதனால் அவரை முதலில் இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Read Also ; பும்ராவின் பத்து வீச்சு யுக்தி எப்படி சாத்தியம் ஆகிறது

கில்லை கழட்டிவிட முடிவு

ரோஹித், விராட் கோலிக்கு ரெஸ்ட் கிடையாது.. இங்கிலாந்து தொடருக்கு தயாராகுங்கள்.. பிசிசிஐ முடிவு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலுயா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மா உடனடியாக ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் கவனம் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு முன்பாக வரும் 22ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், பிப்.6 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனிடையே இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியால், பிசிசிஐ நிர்வாகிகள் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை தவிர சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள அத்தனை வீரர்களும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடைசியாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று தோல்வியை தழுவிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படுமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

அதேபோல் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டரில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால் கம்பீர் தொடக்க வீரர்கள் கூட்டணி இடதுகை – வலதுகை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இதனால் சுப்மன் கில் இடத்தில் இடதுகை நட்சத்திர பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து சுப்மன் கில் ஒருநாள் அணியிலும் பெஞ்ச் செய்யப்படுவார் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *