சுவையான் தரமான் சமையல் பொடிகள் வீட்டிலேயே எப்படி செய்வது என்று விரிவாக செய்முறையும் பார்ப்போம் மற்றும் கூட்டு வகைகள் செய்வது எப்படி என்பதையும் முழுவதுமாக பார்ப்போம்
சாம்பார் பொடி – 1
தேவையான பொருட்கள் தனியா – 3 ஆழாக்கு துவரம் பருப்பு – ஒரு ஆழாக்கு மிளகு – ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பு – ஒரு ஆழாக்கு விரளி மஞ்சள் – 6 மிளகாய்வற்றல் – 5 வெந்தயம் – கால் ஆழாக்கு கடுகு – கால் ஆழாக்கு செய்முறை எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம்
இட்லி மிளகாய்ப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் – 100 கிராம் உளுத்தம் பருப்பு – 100 மில்லி கடலைப்பருப்பு – 100 மில்லி பெருங்காயம் – புளியாங்கெட்டை அளவு எள்ளு – ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் – அரை தேக்கரண்டி உப்பு – தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும்
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் குண்டு மிளகாய் – 1/4 கிலோ, தனியா – 3/4 கிலோ, சீரகம் – 100 கிராம், மிளகு – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், விரளி மஞ்சள் – 100 கிராம், பச்சரிசி – 50 கிராம், செய்முறை எல்லாவற்றையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மெஷினில் நைசாக அரைக்கவும்
கறிவேப்பிலைப் பொடி
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – 50 கிராம் உளுத்தம்பருப்பு – 20 கிராம் மிளகாய் வற்றல் – 10 எண்ணெய் – சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்
ரசப்பொடி
தேவையான பொருட்கள் மிளகாய் – 100 கிராம் மல்லி விதை – 300 கிராம் மிளகு – 50 கிராம் சீரகம் – 50 கிராம் மஞ்சள் – 10 கிராம் துவரம் பருப்பு – 250 கிராம் செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை தனியாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும்.
பிறகு இரண்டையும் கலந்து தகுந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதனை ஒரு மாத காலத்திற்கு உபயோகப்படுத்தலாம். நாட்கள் அதிகமாக, மணமும் ருசியும் குறையும்.
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும்.
அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும்.
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு – 1 கப் காய்ந்த மிளகாய் – 6 பூண்டு – 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி உப்பு – 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும்.
சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு – கால் கப் காஞ்ச மிளகாய் – நன்கு பெருங்கய்ம் – ஒரு பின்ச் உப்பு – ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள்
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் – இரண்டு கப் பொட்டு கடலை – முக்கால் கப் கடலை பருப்பு – முக்கால் கப் தனியா – முக்கால் கப் பெருங்காயம் – இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் – இருபது கிராம்பு – பத்து பட்டை – நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கசகசா – ஒரு தேக்கரண்டி ஏலகாய் – பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம்
Read Also ; 4- வகையான இறால் ரெசிபி மற்றும் மீன் பிரியாணி
ஜலீலா’ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு – ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு – ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் – கால் கப் எள் – இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை – கால் கப் கருவேப்பிலை – கைக்கு ஒரு பிடி உப்பு – ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி – கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும்.
ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது.
செளசெள கேரட் கூட்டு
தேவையான பொருள்கள்
செளசெள – ஒன்று
கேரட் – 2
துவரம் பருப்பு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் – 3 துண்டு
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செளசெள, கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
துவரம் பருப்பை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின செளசெள, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும்.
இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டவும்
சுவையான செளசெள கேரட் கூட்டு தயார்.
இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதே கூட்டை செளசெளவிற்கு பதிலாக கோஸ் அல்லது புடலங்காய் போட்டும் செய்யலாம்
Read Also ; 4 வகை மட்டன் சூப் செய்வது எப்படி
புடலங்காய் கூட்டு
தேவையான பொருள்கள்
புடலங்காய் – ஒன்று
தேங்காய் துருவல் – கால் கப்
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
வேக வைத்த பயத்தம் பருப்பு – அரை கப்
செய்முறை
புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.
வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்.
பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி
சுண்டைக்காய் கூட்டு
தேவையான பொருள்கள்
சுண்டைக்காய் – கால் கப்
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
கடுகு – முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு – 25 கிராம்
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும்.
துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
வாழைத்தண்டு கூட்டு
தேவையான பொருள்கள்
வாழைத்தண்டு – 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று
கடலைப் பருப்பு – ஒரு கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
உளுந்து – அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு – அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
கறிவேப்பிலை – கொஞ்சம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், கடலைப் பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாழைத்தண்டு கூட்டு தயார்.