மணல் மாபியாக்களால் உயிருக்கு ஆபத்து காவலர் கடிதம்

ஒரு காலத்தில் தமிழ்நாடு காவல் துறை என்பது ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையாக பேசப்பட்டது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா எங்கும் நக்சலைட்டுகள் பல மாநிலங்களை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நின்றனர் ஆனால் தமிழகத்தில் அவர்களால் நுழைய முடியவில்லை காரணம் அப்போதைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து நக்சலைட் ஒழிப்பில் இந்தியாவில் முன்னோடியாக திகழ்ந்தது தமிழ்நாடு காவல்துறை.
அப்பேர்ப்பட்ட காவல்துறையை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஸ்டாலின் அரசு அரசால் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை, ஏன் காவல் துறை அதிகாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை இப்படிப்பட்ட சூழ் நிலையில் திருட்டும் மணல் அள்ளிய கும்பலை தனது உயிரை பணயமாக வைத்து பிடித்த காவல்துறை அதிகாரியின் கண்ணீர் கடிதம் இதோ

காவலரின் கடிதம்

அனுப்புநர்:
அ.பிரபாகரன்,
முதல்நிலை காவலர் 1429, சிவகிரி காவல் நிலையம், தென்காசி மாவட்டம்.
பெறுநர்:
உயர்திரு.காவல்துறை இயக்குநர் அவர்கள், தலைமை இயக்குநர் அலுவலகம்,
மயிலாப்பூர்,
சென்னை-600004.
பொருள் :
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிவது உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாலும் காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் முயற்சி நடந்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படுவதாலும் மேலும் பல அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பாதாலும் எனக்கு தொடர்ந்து பணிபுரிய அச்சமாக இருப்பதால் என்னை பணியில் விடுவிக்க கோரி விண்ணப்பம்.

மதிப்பிற்குரிய காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு,

நான் சிவகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் 18.12.2024ம் தேதி டே பீட் அலுவலாக சிவகிரி காவல்நிலைய எல்கையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிவகிரி நீதி மன்றத்தின் அருகே மெயின் ரோட்டில் வைத்து 14.15 மணியளவில் எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டர் பில்லை மட்டும் வைத்துக்கொண்டு.
அரசு அனுமதியின்றி TN 55 AP 5356 Tractor 1 யுனிட் கெப்பாசிட்டி கொண்ட வாகனத்தில் எம் சாண்ட் மணலினை முறைகேடாக கடத்தி வந்த நபரினை காவல்நிலையம் அழைத்து வந்து நிலைய பாராவிடம் ஒப்படைத்துவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற சொல்லிவிட்டு பின்னர் இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று சிவகிரி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கநாதம் புத்தூர் விளக்கில் பிள்ளையார் கோவில் அருகில் வைத்து எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டர் பில்லை மட்டும் வைத்துக்கொண்டு அரசு அனுமதியின்றி TN 84 P 8007 Tractor வாகனத்தில் ஜல்லி கல்லினை ஏற்றி வந்த நபரின் வாகனத்தினையும் அதனுடன் வந்த 2 மாட்டுவண்டிகள் நிறைய ஆற்றுமணலை திருடி கொண்டு வந்த 2 நபர்கள் என மொத்தம் 3 நபர்களையும் 3 வாகனங்களையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வருவதற்காக காவல் நிலையத்திற்கு 18.12.24 ம் தேதி மதியம் 03.10 மணிக்கும் 03.16 மற்றும் 03.24 மணிக்கும் தகவல் கூறி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க சொல்லியும்.

காவல்துறை அதிகாரிகள் உடந்தை

பின்னர் அன்று நான் பிக் அவர்ஸ் பணியில் இருந்த முதல்நிலை காவலர் திரு.ராஜேஸ் கண்ணா அவர்களுக்கும் 03.21 மணிக்கு தகவல் தெரிவித்த போது உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் அவர்கள் வேறு அலுவலாக தன்னை நியமித்துள்ளார் எனவும் தெரிவித்தார். அதன் பின்னர் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு.மகேந்திரன் என்பவருக்கு 03.26 03.43 மற்றும் 03.50 ஆகிய நேரங்களில் தகவல் தெரிவித்த பின்னர்
உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. மகேந்திரன் ஆகியோர் உதவியுடன் கைப்பற்றிய 3 நபர்களையும் 3 வாகனங்களையும் காவல் நிலையம் கொண்டுவர வேண்டி சொக்கநாதன் புத்தூர் விலக்கிலிருந்து சிவகிரிக்கு AKR என்ற கல்குவாரி வழியாக அழைத்து சென்று கொண்டிருந்த போது விக்னேஷ் பிஎல்ஆர் மற்றும் தாஸ் என்ற 3 நபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வழிமறித்து தடுத்து நிறுத்தி காவல் பணியை செய்ய விடாமல் தடுத்து இது என்ன ஏரியா தெரியுமா, நீங்க யாரு எந்த ஊரு என்று எல்லாமே எங்களுக்கு தெரியும் வேற மாதிரி ஆயிடும் என கையை நீட்டி ஒருமையில் அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி மேற்படி வாகனங்களையும் கைப்பற்றி அபகறித்து கொண்டு போக சொல்லிவிட்டனர்.
மேலும் அங்கிருந்த ஒரு நபர் இப்போ தான் ஸ்டேசன்ல ஒரு வண்டிய எடுத்துட்டு வந்தேன் திரும்பவும் எங்க ஏரியா வண்டிய பிடிச்சா வேற மாதிரி ஆயிடும் என தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
உதவி ஆய்வாளரும் தனிப்பிரிவு காவலரும் இருக்கும் போதே வாகனங்களை அத்துமிறி எடுத்துச் சென்று விட்டனர். அதன்பின் நிலையம் வந்து பாரா தலைமைக் காவலர் திரு.சுந்தர்ராஜ் என்பவரிடம் கேட்ட போது TN 55 AP 5356 Tractor வாகனத்தினை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வேறு பாஸ் கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததை தெரிந்து நான் மிகுந்த அச்சத்துக்குள்ளானேன்.

காவலருக்கு கொலை மிரட்டல்

இது தொடர்பாக வாகன ஓட்டுநர்கள் பாஸ் இல்லாமல் தான் வாகனம் இயக்குவதாக பேசிய தெளிவான வீடியோ ஆதாரமும் மேலும் பணியில் இருந்த என்னை பணி செய்ய விடாமல் எனது பணியினை தடுத்து எனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர்களின் வீடியோ ஆதாரங்களும் என்னிடத்தில்
உள்ளது. மேலும் AKR கல்குவாரியில் முறைகேடாக கொடுக்கப்பட்ட கணிணி பில்களும் தங்கள் வசம் ஒப்படைக்கிறேன். மேற்படி சம்பவத்தால் எனக்கு காவல் பணி புரிய மிகவும் அச்சமாக உள்ளது.
காவலர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ள சிவகிரியில் தொடர்ந்து வேலை செய்யவும் இதுபோல பல அரசுக்கு எதிராக நடக்கும் அனைத்து சம்பவத்திற்கும் உடந்தையாக நின்று வழிகாட்டியாக இருக்கும் உயரதிகாரிகளை கண்டு எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. மேற்படி சம்பவமானது காவல் ஆய்வாளர் காவல் துணை கண்காணிப்பாளரின் பார்வைக்கு உதவி ஆய்வாளரால் தெரிவிக்கப்பட்ட பட்சத்திலும் என்னிடம் இது சம்மந்தமாக எந்த விளக்கமோ நம்பிக்கையோ கொடுக்காததும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் என்னை ஆல்பா பணிக்கு சம்பவம் நடந்த மறுநாளே 19.12.24 ம் தேதி மாற்றியது குற்றவாளிகளை காக்க வேண்டியும் தவறை மறைக்கும் நோக்கோடு அதிகாரிகள் செயல்படுவதும் எனக்கு மேலும் மன அழுத்ததை கொடுக்கிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக 18.12.2024 தேதி காவல் நிலையத்தில் காவல் துறை தலைமை இயக்குநருக்கு புகார்மனு அளித்து அம்மனு பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. ஆனால் அந்த மனுவினை காவல்துறை இயக்குநருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்து குற்றவாளிகளை பாதுகாத்தும் குற்றத்திற்கு உடந்தையாகவும் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே 10.12.24ம் தேதி உதவி ஆய்வாளர் உத்தரவுப்படி இராயகிரி பகுதியில் குட்கா விற்பனை செய்த மாதவன் என்பவரின் கடைக்கு சீல் வைக்க வேண்டி சென்றிருந்த போது கடை எதிரே TN79 F 2508 என்ற வாகனத்தில் ஜல்லி ஏற்றி வந்த வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை நிறுத்தி பாஸ் கேட்ட போது பாஸ் இல்லாமல் வெறும் AKR கல்குவாரியில் கொடுத்த பில்லினை மட்டும் வைத்துக் கொண்டு அரசு அனுமதியின்றி வாகனத்தை கனிம வள திருட்டில் ஈடுபட்டதை காவல் உதவி ஆய்வாளருக்கும் அவருடன் அன்று உடனிருந்த தனிப்பிரிவு முதல் நிலைக் காவலருக்கும் தகவல் அளித்த போது மேற்படி வாகனங்கள் புளியங்குடி டிஎஸ்பி கன்ட்ரோலில் வாகனம் இயங்குவதாக தெரிவித்தனர். ஆதற்கான ஆடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
பெருமை மிகு காவல் பணியில் களங்கம் விளைவிக்கும் விதமாக அனைத்து அதிகாரிகளும் இலட்சக்கணக்கில் பணத்தை வாரி குவித்துக்கொண்டு காவலர்களை ரோல்காலில் சோற்றை திங்குறியா வேற ஏதையும் திங்குறியா என சிவகிரி காவல் ஆய்வாளர் காவலர்களை கேட்பதும் உதவி ஆய்வாளர் திரு.வரதராஜன் அவர்கள் உயிரை துச்சமாக நினைத்து பிடித்த கஞ்சா வாகனத்தை நீதிமன்றத்தில் காட்டாமல் உடனே கொடுக்க சொல்லி மிரட்டி கஞ்சா குற்றவாளிகளுக்கும் உடந்தையாக நிற்கும் புளியங்குடி டிஎஸ்பி திரு.வெங்கடேசன் போன்ற அதிகாரிகள் காவலர்களை பார்த்து சோறு திங்காத பச்சசை காய்கறி தின்னு என்று ஒருமையில் பேசுவதையும் மைக்கில் காவலர்களை மரியாதை குறைவாக பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
சீர்மிகு காவல் பணியில் களங்கம் விளைவிக்கும இது போன்ற அதிகாரிகளால் காவல்பணியில் கடந்த 4 நான்கு வருடங்களில் 300க்கும் மேற்பட்ட காவலரகள் தற்கொலை செய்துள்ளனர் மொத்தம் 1400 காவலர்கள் விபத்து நெஞ்சுலி ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். மேறும் கடந்த 12 ஆண்டுகளில் 4125 காவலர்களை சஸ்பெண்ட செய்தும் 344 காவலர்களை டிஸ்மிஸ் செய்ததும் என்பது மிகவும் வருந்ததக்க வெறும் செய்தியாக மட்டுமே வருகின்றது. தொடர்ந்து காவல் பணியில் களங்கம் விளைவித்து காவலர்களின் உயிருக்கும் நலனுக்கும் ஊறு விளைவித்து குற்றவாளிகளின் நண்பனாக விளங்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து விடுவிக்குமாறு மிகவும் மன அழுத்தத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பாஸ் இல்லாமல் இயக்கிவந்து கைப்பற்றப்பட்டு காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை அரை மணி நேரத்தில் போலியான பாஸ் தயார் செய்து மொத்தத்தில் 3 CBM கெப்பாசிட்டி அளவு கொண்ட மினி டிராக்டருக்கு 9CBM அளவு போலியாக பதிவு செய்தும் ஜல்லிக்கல் என பதிவு செய்து எம்சாண்ட் வாகனத்தை காவல் அதிகாரிகளின் உத்தரவோடு நிலைய பாரா காவலர் திரு.சுந்தர்ராஜ் அவர்கள் கொடுத்தது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகள் மீதும் காவல் உயரதிகாரிகள் மீதும் வழிமறித்து வாகனங்களை கடத்திச்சென்ற விக்னேஷ் பிஎல்ஆர் மற்றும் தாஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்னர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருந்துமா திமுக அரசு

இவ்வாறு காவலர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் அது மட்டுமல்லாது காவல் துறை சேர்ந்த அதிகாரிகளே குற்றவாளிகளுக்கு துணை போய் உள்ளதையும் மிகுந்த மன உளைச்சலோடு தெரிவித்து இருக்கிறார் அதற்கெல்லாம் மேலாக மணல் கடத்தல் மாஃபியாவிடமிருந்து தன் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கஞ்சா வியாபாரிகளுக்கும் மணல் மாஃபியாக்களுக்கும் கொஞ்சம் கூட ஆளும் அரசின் மீதும் காவல்துறையின் மீதும் சட்டத்தின் மீதும் பயமில்லாமல் துணிவாக செயல்படுகிறார்கள் இனிமேலாவது இந்த திமுக அரசு விழிப்போடு பொறுப்போடு செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *